முகப்பு /செய்தி /கல்வி / பொறியியல் படிக்க நாளை முதல் விண்ணப்பிக்கலாம்... முழு விவரம் இதோ..!

பொறியியல் படிக்க நாளை முதல் விண்ணப்பிக்கலாம்... முழு விவரம் இதோ..!

பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பம்

பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பம்

BE And B Tech Admission | பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை நாளை முதல் தொடங்கப்படவுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

2023-24-ம் கல்வியாண்டில் முதலாமாண்டு B.E / B.Tech / B.Arch பட்டப்படிப்பிற்கு சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் நாளை முதல் தொடங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8 ஆம் தேதி வெளியாகவுள்ளன. இதனையடுத்து B.E / B.Tech / B.Arch பட்டப்படிப்பிற்கு அரசு/ அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான  விண்ணப்ப செயல்முறை  நாளை முதல் தொடங்கப்படுகிறது.

மாணவர்கள் https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும் இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு ஏதுவாக, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் TNEA Facilitation centre (TFCs) அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

நாளை முதல் (05.05.2023) தொடங்கி ஜூன் 4 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு பதிவுக் கட்டணமாக OC / BC / BCM / MBC & DNC பிரிவு விண்ணப்பதார்கள் ரூ.500 மற்றும் SC / SCA / ST பிரிவு விண்ணப்பதார்கள் ரு.250 செலுத்த வேண்டும். ஆன்லைனில் செலுத்த இயலாத மாணவர்கள் The Secretary TNEA payable at chennai என்ற பெயரில் வரைவோலையை பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம்.

மாணவர்கள் கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே அறிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது அசல் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக சரிபார்க்கும்பொருட்டு, தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை தேர்வு செய்து கொள்ளவேண்டும்.

Also Read : “அண்ணா மன்னிக்க மாட்டார்... அமைச்சர் செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும்..” - அன்புமணி அறிக்கை..!

சான்றிதழ்கள் இணையதளம் வாயிலாக சரிபார்க்கும் போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், மாணவர்களின் பதிவு செய்த அலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும். அதன் பெயரில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் TFC மையத்திற்கு நேரடியாக வந்து சரிசெய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

top videos

    மேலும் B.E., B.Tech (Lateral Entry and Part Time) பட்டப் படிப்புகள் சேர்க்கைக்கான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் சந்தேகங்களுக்கு 044 – 2235 1014 / 1015 மற்றும் 1800 – 425 – 0110 என்ற தொலைப்பேசி எண்களுக்கும் tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்புக் கொள்ளலாம்.

    First published:

    Tags: Education, Engineering, Engineering counselling