முகப்பு /செய்தி /கல்வி / இஞ்சினியரிங் கவுன்சிலிங் தொடங்கும் தேதி... அமைச்சர் பொன்முடி அறிவிப்பு...!

இஞ்சினியரிங் கவுன்சிலிங் தொடங்கும் தேதி... அமைச்சர் பொன்முடி அறிவிப்பு...!

அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 8ஆம் தேதி வெளியான நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 2ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 8ஆம் தேதி வெளியானது. இதையடுத்து மாணவர்கள் கல்லூரிகளில் சேரும் நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 2ஆம் தேதி தொடங்கும் என்றும், பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதியும் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 3ஆம் தேதி பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் என தொடங்கும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். கடந்த ஆண்டை விட ஒரு மாதம் கல்லூரிகள் முன்பே தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாலிடெக்னிக் படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் நாளை (மே 20) முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

top videos
    First published:

    Tags: College Admission, Engineering, Engineering counselling, Minister Ponmudi