முகப்பு /செய்தி /கல்வி / மாணவர்கள் கவனத்திற்கு... 10ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்...!

மாணவர்கள் கவனத்திற்கு... 10ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்...!

கோப்பு படம்

கோப்பு படம்

10th Mark Sheet | பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் அவரவர் படித்த பள்ளியிலேயே வழங்கப்பட இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

10ம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் பதினொன்றாம் வகுப்பு சேர இருக்கும் மாணவர்களின் நலனுக்காக மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை உடனடியாக வழங்குவதற்கு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

இந்நிலையில் மாணவர்கள் இன்று முதல் அவரவர் படித்த பள்ளியின் மூலமாகவும் இணையதளம் மூலமாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  www.dge.tn.gov.in  என்கிற இணையதளத்தில் பதிவிறக்க செய்து கொள்ளலாம்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் மாணவரின் பெயர், பிறந்த தேதி, பயிற்று மொழி மற்றும் மதிப்பெண் ஆகிய அனைத்து விவரங்களும் சரியாக இருக்கின்றதா என்பதனை சரிபார்த்த பின்னரே மாணவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... School Reopen date | ஜூன் 7 பள்ளிகள் திறப்பு? இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் அமைச்சர்...!

top videos

    மேலும், சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அது பள்ளி கல்வித்துறை இயக்கத்தின் சார்பில் திருத்தங்கள் செய்து மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: 10th Exam Result, Education department, Total marks