முகப்பு /செய்தி /கல்வி / “நந்தினிகளின் உயரங்கள் தான் தமிழ்நாட்டின் அடையாளம்..!” - முதலமைச்சர் ஸ்டாலின்

“நந்தினிகளின் உயரங்கள் தான் தமிழ்நாட்டின் அடையாளம்..!” - முதலமைச்சர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் - மாணவி நந்தினி

முதல்வர் ஸ்டாலின் - மாணவி நந்தினி

"படிப்புதான் சொத்து என்று நினைத்துப் படித்தேன்" எனப் பேட்டியில் நந்தினி கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • Last Updated :
  • Tamil Nadu, India

எளிய குடும்பப் பின்னணி கொண்ட நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள்தான் நம் தமிழ்நாட்டின் அடையாளம் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. 8,03,385 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.03 சதவிகிமாகும். இந்த பொதுத் தேர்வில், அரசு உதவி பெறும், திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி, 6 பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, 600 மதிப்பெண்களோடு மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். நந்தியின் தந்தை கூலித்தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார்.

மாணவி நந்தினி  இன்று தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர், அம்மாணவியிடம் உயர்கல்வி பயில்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது,  நந்தினியின் பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியை உடனிருந்தனர்.

இந்த சந்திப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், "கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து" என்று பல நிகழ்ச்சிகளிலும் நான் கூறி வருகிறேன். நேற்று வெளியான +2 பொதுத்தேர்வு முடிவில் 600/600 பெற்றுச் சாதனை படைத்துள்ள மாணவி நந்தினியும் "படிப்புதான் சொத்து என்று நினைத்துப் படித்தேன்" எனப் பேட்டியில் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன்.

அவரை இன்று நேரிலும் அழைத்து வாழ்த்தினேன். அவரது உயர்கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நமது அரசே செய்து தரும் என்ற உறுதியையும் வழங்கியுள்ளேன். எளிய குடும்பப் பின்னணி கொண்ட நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள்தான் நம் தமிழ்நாட்டின் அடையாளம்" என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: CM MK Stalin