முகப்பு /செய்தி /கல்வி / CUET UG 2023: மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்... தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

CUET UG 2023: மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்... தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

CUET இளங்கலை நுழைவுத்தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, உள்ள விண்ணப்பத்தில் தேர்வு செய்துள்ள 10 பாடங்களை திருத்தம்  செய்ய நினைப்போரும் இந்த கடைசி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்

  • Last Updated :
  • Tamil Nadu, India

CUET 2023 Application Deadline Extend to 11th April: விண்ணப்பதாரர்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு இளங்கலை பொது நுழைவுத் தேர்வுக்கு (Common University Entrance Test (UG) - 2023) விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை மீண்டும் நீட்டித்துள்ளது. இதுவரை விண்ணப்பம் செய்யாத மாணவர்கள், இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி வரும் ஏப்ரல் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் சேருவதற்கான CUET இளங்கலை நுழைவுத் தேர்வு மே 21ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. முன்னதாக, நாடு முழுவதிலும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கான (சியுஇடி - யுஜி ) 2023 தேசிய பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச்  மாதம் 12ம் தேதி வரை பெறப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு கல்லூரி நிறுவனங்கள் சியுஇடி - யுஜி நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ள ஆர்வம் தெரிவித்திருந்தனர். அதன்படி, விண்ணப்பக் கால அவகாசத்தை கடந்த மார்ச் 30ம் தேதி வரை நீட்டித்தது. மேலும், விண்ணப்பதாரர் தங்களது விண்ணப்பங்களில், திருத்தங்களை மேற்கொள்வதற்கான வசதி ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து  3ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவித்தது.

விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு:

இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு, மீண்டும் விண்ணப்ப செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை, விண்ணப்பிக்காதவர்கள், பழைய விண்ணப்பபங்களில் தேர்வுக் கட்டணம் செலுத்தாதவர்கள் இந்த கடைசி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதே வேளையில், பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள  பல்கலைக்கழகங்கள்/ பாடத் திட்டங்களில் இருந்தும் மாணவர்கள் தாங்கள் விண்ணப்பத்தில் சேர்த்துக் கொள்ளலாம். ஏற்கனவே, உள்ள விண்ணப்பத்தில் தேர்வு செய்துள்ள 10 பாடங்களை திருத்தம்  செய்ய நினைப்போரும் இந்த கடைசி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் வாசிக்க: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டுமா...? அட்மிஷன் ஆரம்பம்..!

இந்த ஆண்டு, CUET -UG  (2023) நுழைவுத் தேர்வில்  கலந்து கொள்ளும் உயர்கல்வி நிறுவங்களின் விவரங்களை இந்த இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  விண்ணப்பங்களை, 2023 ஏப்ரல் 11ம் தேதி வரை https://cuet.samarth.ac.in/ என்ற இணையளத்தில் தாக்கல் செய்யலாம். இந்தத் தேதிக்குப்பின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

top videos

    அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு,  https://cuet.samarth.ac.in/ மற்றும் www.nta.ac.in என்ற இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    First published:

    Tags: Exam