மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பிற்கு சேருவதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வான CUET தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே (30.03.2023) கடைசி நாளாகும்.
CUET தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி தொடங்கிய நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு மார்ச் 30 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் https://cuet.samarth.ac.in/ என்ற இணைய முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்தேர்வு மூலம் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் பல்வேறு பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்பில் சேரலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கட்டாயம் என்ற இருந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க சிக்கல் ஏற்பட்டது.
Also Read : TET தேர்வு: 10% கூட தேர்ச்சியில்லை..? அதிர்ச்சி தகவல்
தமிழ்நாடு மாணவர்களில் விண்ணப்பத்திற்கு ஏற்று, கொரோனா காலத்தில் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் மதிப்பெண்ணைத் தெரிவிக்க வேண்டியதில்லை எனத் தெரிவித்தனர். இன்று இரவு 09.50 மணியுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கால அவகாசம் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து, ஏப்ரல் 30 ஆம் தேதி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான மையங்கள் பட்டியல் வெளியிடப்படும். மேலும் மே 21 முதல் தேர்வு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entrance Exam, University