ஐசிஎஸ்ஐ பாடத்தின் கீழ் பயிலும 10, 12ம் மாணவர்களுக்கான தேர்வு தேர்வுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை (ஐசிஎஸ்இ) தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் சிரமமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள results.cisce.org என்ற இணையதளம் வாயிலாகவும், செல்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அரசு துறையும், அரசுசாராத் துறையும் பொதுக்கல்வியை வழங்கி வருகின்றன. அந்த வகையில், அரசு சாராத் துறையான ஐசிஎஸ்இ, நாட்டின் தனியார் கல்வி பாடசாலைகளை கட்டுப்படுத்தி மதிப்பீடு செய்து வருகிறது. இதன்கீழ், நூற்றுக்கணக்கான பாடசாலைகள் இணைந்துள்ளன. இந்த சபை, ஆண்டுதோறும் மேல்நிலை வகுப்புத் தேர்வுகளையும் (the Indian School Certificate (ISC -Class XII Examination), உயர்நிலை வகுப்புத் தேர்வுகளையும் (The Indian Certificate of Secondary Education (ICSE - Class X Examination) நடத்துகிறது.
பத்தாம் வகுப்பிற்கு பிப்ரவரி 27 முதல் மார்ச் 29 வரை நடைபெற்றது. 12ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 13 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது.
இதையும் வாசிக்க: சிபிஎஸ்இ 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் - எப்படிப் பார்ப்பது ?
12ம் வகுப்பில் 98,305 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 95,483 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 96.93 சதமாகும். அதேபோன்று, 10ம் வகுப்பில் 98.94 சதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 10th Exam, 10th Exam Result, 12th exam, 12th Exam results