முகப்பு /செய்தி /கல்வி / 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000... முதல்வர் அறிவித்த சூப்பர் திட்டம் இதோ...!

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000... முதல்வர் அறிவித்த சூப்பர் திட்டம் இதோ...!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அவர்களுடைய உயர்கல்வியைத் தொடரும்பொழுதும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.12,000/- வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

'தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு" என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சென்னை ஐஐடி வளாகத்தில், "அனைவருக்கும் ITM" திட்டத்தில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறைப் பெட்டகங்களை  வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு என்ற புதிய திட்டத்தையும் அறிவித்தார்.

இப்புதிய திட்டத்தின் வாயிலாக, பத்தாம் வகுப்புப் பயிலும் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அனைவருக்கும் பதினொன்றாம், பன்னிரெண்டாம் வகுப்புகளை நிறைவு செய்யும் வரை ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000/- கல்வி உதவித் தொகை வழங்கப்படும். மேலும், இம்மாணவர்களுக்கு ஐஐடி போன்ற தமிழ்நாட்டிலுள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் தொடர் பயிற்சிகளும் வழங்கப்படும்.

இது மட்டுமல்லாமல், இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அவர்களுடைய உயர்கல்வியைத் தொடரும் பொழுதும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.12,000/- வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

First published:

Tags: MK Stalin, School students