முகப்பு /செய்தி /கல்வி / 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடா...? சிபிஎஸ்இ விளக்கம்...!

10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடா...? சிபிஎஸ்இ விளக்கம்...!

காட்சிப் படம்

காட்சிப் படம்

தேர்வு முடிவுகள்  விரைவில் வெளியாகும், ஆனால் வெளியிடும் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

  • Last Updated :
  • Tamil Nadu |

CBSE Result 2023 Class X and XII coming soon |  மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10, 12ம் வகுப்பின் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.  இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள சிபிஎஸ்இ, தேர்வு முடிவுகள்  விரைவில் வெளியாகும், ஆனால் வெளியிடும் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும், சிபிஎஸ்இ தேர்வு மதிப்பெண் சான்றிதழ் விரைவில் டிஜி லாக்கரில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சிபிஎஸ்இ வாரியத்தின் cbse.nic.in, cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களின் வாயிலாக சிரமமின்றி தேர்வு முடிவுகளை காணலாம். கூடுதலாக, பள்ளி மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும், 2016ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ வாரியம் தேர்வு மதிப்பெண் சான்றிதழை டிஜி லாக்கரில் பதிவேற்றம் செய்து வருகிறது. டிஜிட்டல் லாக்கர் என்பது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்னோடித் திட்டமாகும். டிஜி லாக்கர் அசல் ஆவணங்களின் பாதுகாப்பான டிஜிட்டல் பதிவை கிளவுட்டில் வைத்திருக்க உதவுகிறது.

டிஜிலாக்கர் இணையதளத்திற்கு சென்று, பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி  எண்ணையும், கடவுச் சொல்லையும் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில், தேர்வு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், UMANG என்ற செயலியின் மூலமும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தச் செயலி, கூகுள் பிளே ( ஆன்ட்ராய்டு போன்களுக்கு) ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் ( ஐ போன்களுக்கு) ஆகியவற்றில் கிடைக்கும்

இதுதவிர, ஐவிஆர்எஸ் சேவைகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். டெல்லியில் உள்ள மாணவர்கள் 24300699 என்ற எண்ணுக்கும், டெல்லிக்கு வெளிப்புறம் உள்ள மாணவர்கள் 011 – 24300699 என்ற எண்ணுக்கும் அழைத்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். கூடுதலாக, 7738299899 என்று எண்ணுக்கு  cbse12 <rollno> <sch no> <center no>  ஆகிய தகவல்களுடன் குறுஞ்செய்தி அனுப்பியும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

இதையும் வாசிக்க600/600: TN 12th State Rank Nandhini Exclusive | மார்க் எடுப்பது மட்டும் வெற்றி அல்ல - மாணவி நந்தினி

top videos

    இந்தாண்டு முதல் தேர்வு முடிவுகளில், மாணவர்கள் மத்தியில் ஏற்படும் ஆரோக்கியமற்ற போட்டி சூழல் மற்றும் மன அழுத்தத்த்தை குறைக்கும் வகையில் அதிக மதிப்பெண் பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியிடும் வழக்கத்தை சிபிஎஸ்இ கைவிட்டுள்ளது. பிராந்திய ரீதியாக தேர்ச்சி விகிதமும், மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: 10th Exam Result, CBSE