சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 5 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. தற்போது அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.
தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்துகொள்வது?
சிபிஎஸ்இ மாணவர்கள் எளிமையான முறையில் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் வகையில் 4 இணைய முகவரி அளிக்கப்பட்டுள்ளது.
https://results.cbse.nic.in/, http://results.nic.in/, http://resluts.digilocker.gov.in, https://web.umang.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையத்தளங்களில் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
UMANG என்ற மொபைல் ஆப் மூலமாகவும் மாணவர்கள் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் விவரங்கள்:
நாடு முழுவதுமுள்ள 16,728 சி.பி.எஸ்.இ பள்ளிகளில் மத்திய பாடத்தின் கீழ் 16,60,511 மாணவர்கள் இந்தாண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளனர். அதில் 14,50,174 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 87.33 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 5.38 சதவீதம் குறைவு.
திருவனந்தபுரத்தில் 99.91 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்து முதல் இடத்தில் உள்ளனர். இது இந்திய அளவில் அதிக தேர்ச்சி விகிதமாக உள்ளது. சென்னையில் தேர்ச்சி விகிதம் 97.40 சதவீதமாக உள்ளது.
Also Read : சிபிஎஸ்இ பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது..
மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 90.68 சதவீதமாகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 84.67 சதவீதமாக உள்ளது. மூன்றாம் பாலினத்தவர் தேர்ச்சி விகிதம் 60 சதவீதமாக உள்ளது. மாணவர்களை விட மாணவிகள் 6.01 சதவீதம் அதிகளவு தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் 5,645 பேர் தேர்வு எழுதிய நிலையில், 4,924 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 87.23 சதவீதம் தேர்ச்சியாக இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 12th exam, 12th Exam results, CBSE