முகப்பு /செய்தி /கல்வி / சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு..

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு..

சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ

CBSE 10th Results : சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. மாணவர்கள் https://results.cbse.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளை காணலாம். மேலும் மாணவர்கள் எளிமையான முறையில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளும் வகையில் குறுச்செய்தி வழியாக மதிப்பெண்கள் அனுப்பப்படும்.

தேர்வு முடிவுகளை காண :

https://results.cbse.nic.in/,  http://results.nic.in/,  http://resluts.digilocker.gov.in, https://web.umang.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையத்தளங்களில் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு விவரங்கள் :

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி மார்ச் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 24,480 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் இந்தாண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளனர்.

இந்தாண்டு சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 21,65,805 மாணவர்கள் எழுதிய நிலையில், 20,16,779 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 93.12 சதவீதமாக உள்ளது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் கடந்தாண்டை விட 1.28 சதவீதம் குறைந்துள்ளது.

top videos

    இந்தியாவில் திருவனந்தபுரம் 99.91 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் முதல் இடத்தையும், சென்னை 99.14 சதவீத தேர்ச்சியுடன் பட்டியலில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. இந்தாண்டு தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 95.21 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 93.80 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், மூன்றாம் பாலின மாணவர்கள் 90 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்தாண்டு மாணவர்களை விட மாணவிகளே 1.98 சதவீதம் அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 7,154 பேர் தேர்வு எழுதிய நிலையில், 6,627 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    First published:

    Tags: 10th Exam, 10th Exam Result, CBSE