மானாமதுரையில் ஆட்டோ ஓட்டுனரின் மகள் 10ம் வகுப்பு அரசு பொது தேர்வில் 493 மதிப்பெண் பெற்று அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் முதல் இடம்பிடித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நீயூ வசந்த நகரில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் விஜயக்குமார், ஜெகதா தம்பதியினர் மகள் இலக்கியா. மானாமதுரை அரசுபெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. இதில் 500க்கு 493மதிப்பெண்கள் பெற்று சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முதலிடம் பெற்றுள்ளார். தமிழ் பாடத்தில் 98, ஆங்கிலத்தில் 98, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 97 என ஒட்டுமொத்தமாக 493 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இதை கொண்டாடும் விதமாக பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு மாணவியின் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து இனிப்புகள் வழங்கி கொடுத்து கொண்டாடினார்.
இதையும் வாசிக்க: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. சென்னைக்கு எந்த இடம் தெரியுமா?
தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட இலக்கியா, " கணிதம், அறிவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. உயர்கல்வியில் வேளாண்மை படிக்க விரும்புவதாகவும், ஐஏஎஸ் அதிகாரியாவது தனது விருப்பம் என்றும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 10th Exam, 10th Exam Result