முகப்பு /செய்தி /கல்வி / “ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தா தேர்வு எழுதலாமா?... அது அப்போ சொன்னது” ... அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்..!

“ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தா தேர்வு எழுதலாமா?... அது அப்போ சொன்னது” ... அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்..!

அமைச்சர் அன்பில் மகேஷ்

அமைச்சர் அன்பில் மகேஷ்

பொதுத் தேர்வு எழுத உள்ள விதிமுறைகள் குறித்து பல்வேறு தகவல்கள் பரவிய நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சியினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தற்பொழுது தேர்வு எழுதும் மாணவர்கள் எல்லாம் பத்தாம் வகுப்பில் ஆல்பாஸ் ஆனவர்கள்.

அவர்களுக்குத் தேர்வு பயம் என்பது கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்திருக்கும், எனவே அவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுத வேண்டும் என்பதற்காகவே, அனைவரும் தேர்வு எழுத வாருங்கள், அனைவருக்கும் ஹால் டிக்கெட் தருகிறோம் எனக் கூறினோம். இந்த ஆண்டு அந்த நடைமுறை பின்பற்றப்படாது.

Also Read : 50,000 மாணவர்கள் ஆப்சென்ட்... இந்த மாவட்டங்கள்தான் அதிகம்... அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

ஆண்டுக்கு மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தாலே போதும். பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று பரவும் செய்தி தவறானது. கொரோனா காலத்தில் பள்ளிகள் முழுமையாகச் செயல்படாத நேரத்தில் அளிக்கப்பட்ட வாய்ப்பு அது, வரும் கல்வியாண்டில் 75 சதவீதம் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்ற நடைமுறையே அமலில் உள்ளது எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

First published:

Tags: 10th Exam, Anbil Mahesh Poyyamozhi, Public exams