முகப்பு /செய்தி /கல்வி / கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம்... வந்தது முக்கிய அறிவிப்பு..!

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம்... வந்தது முக்கிய அறிவிப்பு..!

கல்லூரி சேர்க்கை

கல்லூரி சேர்க்கை

Arts And Science College Admission | கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்ப விநியோகம் மே 1-ம் தேதி முதல் தொடக்கப்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. இதற்காக முடிவுகள் வரும் மே 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 633 சுயநிதி தனியார் மற்றும் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த நிலையில், வரும் கல்வியாண்டிற்கான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் வரும் மே 1 ஆம் தேதி தொடங்கப்படுகிறது. சுயநிதி கல்லூரிகளில் மே 1 ஆம் தேதி முதலும், அரசு கல்லூரிகளில் மே 9 ஆம் தேதி முதலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 8 ஆம் தேதி முடிவுகள் வெளியான பின்னர், மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துகொள்ளலாம் என்று தனியார் கல்லூரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read : இலவச மடிக்கணினி திட்டத்தை நிறுத்தவில்லை.. கட்டாயம் வழங்கப்படும் - மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசு கல்லூரிகளை பொறுத்தவரை முடிவுகள் வெளியான பின்னர், மே 9ஆம் தேதியில் இருந்து ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம் என்று உயர்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் மே 9 ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் துவங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

top videos
    First published:

    Tags: Admission, College, College Admission, Student