முகப்பு /செய்தி /கல்வி / 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசுத் தேர்வுகள் இயக்ககம்!

10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசுத் தேர்வுகள் இயக்ககம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளாத தேர்வரின் விண்ணப்பம் ஜூன்/ஜூலை 2023-ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத்தேர்விற்கு கண்டிப்பாக நிராகரிக்கப்படும். 

  • Last Updated :
  • Tamil Nadu, India

வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற உள்ள  10ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

ஜூன்/ஜூலை 2023-ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்களும் (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) ஏற்கனவே 2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர 23.05.2023 முதல் 26.05.2023 வரையிலான நாட்களில் பெயர்களை பதிவு செய்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

முதல் முறையாக நேரடி தனித் தேர்வராக பத்தாம் வகுப்பு தேர்வினை எழுத விரும்புவோர் மற்றும் 2012-ஆம் ஆண்டுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறாதோர் ஆகிய விண்ணப்பதாரர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பித்த பிறகே, கருத்தியல் தேர்விற்கு தனித் தேர்வராக விண்ணப்பிக்க வேண்டும். அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு 23.05.2023 முதல் 26.05.2023 வரையிலான நாட்களில், விண்ணப்பிப்பதற்கு தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு சென்று. கட்டணம் ரூ.125/-ஐ பணமாக செலுத்தி, அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்று கொள்ள வேண்டும். இவ்வனுமதி சீட்டை காண்பித்தால் மட்டுமே அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவர்.

செய்முறைப் பயிற்சி பெற்ற தேர்வர்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு செய்முறைத் தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மைய விவரம் அறிந்து செய்முறைத் தேர்வினை தவறாமல் எழுதிட வேண்டும் . செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளாத தேர்வரின் விண்ணப்பம் ஜூன்/ஜூலை 2023-ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத்தேர்விற்கு கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

இதையும் வாசிக்கஇந்திய அஞ்சல்துறையில் 12,828 காலியிடங்கள்: எந்த தேர்வும் இல்லை; உடனே விண்ணப்பியுங்கள்!

top videos

    மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அறிவியல் செய்முறைக்கான விண்ணப்பப் படிவத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 23.05.2023 முதல் 26.05.2023 வரை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து இரண்டு நகல் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களிடம் தனித்தேர்வர்கள் 26.05.2023 க்குள் நேரில் ஒப்படைத்தல் வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: 10th Exam, SSLC