முகப்பு /செய்தி /கல்வி / ஆர்வம் இருந்தா மட்டும் இஞ்சினீயரிங் படிங்க... அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி..!

ஆர்வம் இருந்தா மட்டும் இஞ்சினீயரிங் படிங்க... அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி..!

துணைவேந்தர் வேல்ராஜ்

துணைவேந்தர் வேல்ராஜ்

கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கு வரும் ஆண்டுகளிலும் மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெறுவதோடு வேலை வாய்ப்பு அதிகம் கிடைக்கும்- துணை வேந்தர்

  • Last Updated :
  • Tamil Nadu |

ஆர்வம் இருந்தால் மட்டும் பொறியியல் படிப்பை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று  அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் அறிவுரை வழங்கியுள்ளார்.

நியூஸ் 18 தமிழ்நாடுக்கு பிரத்யேக பேட்டியளித்த துணைவேந்தர் வேல்ராஜ், பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கட்டாயத்தின் பெயரில் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கக் கூடாது அவ்வாறு தேர்ந்தெடுத்தால் அது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

சிவில் மெக்கானிக்கல் ஆகிய படிப்புகளை தேர்ந்தெடுக்கக்கூடிய மாணவர்கள் அவற்றுடன் டேட்டா சயின்ஸ் ,ஆர்டிபிசியில் இன்டெலிஜென்ஸ் போன்றவற்றை உடன் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறித்தினார்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கு வரும் ஆண்டுகளிலும் மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெறுவதோடு வேலை வாய்ப்பு அதில் அதிகம் கிடைக்கும் எனவும் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கஇன்ஜினியரிங் கட் ஆப் மதிப்பெண் குறையுமா...? கல்வியாளர்கள் சொல்வது என்ன? - ஓர் அலசல்

பொறியியல் கலந்தாய்வில் மாணவர்கள் சிறந்த கல்லூரி எவை என்பதை தேர்ந்தெடுக்க விரைவில் கல்லூரிகளின் தர மதிப்பீடு  வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Anna University, Engineering, Engineering counselling