முகப்பு /செய்தி /கல்வி / தமிழ் வழி பொறியியல் பாடப் பிரிவுகள் நீக்கமா...? அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்..!

தமிழ் வழி பொறியியல் பாடப் பிரிவுகள் நீக்கமா...? அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்..!

அண்ணா யுனிவர்சிட்டி

அண்ணா யுனிவர்சிட்டி

Anna university | வரும் கல்வி ஆண்டில் உறுப்பு கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவுகளும் நீக்கப்படாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

தமிழ் மொழியில் பயிற்றுவிக்கப்பட்ட மெக்கானிக்கல் மற்றும் சிவில் இளங்கலை பொறியியல் பாடப் பிரிவுகளை மூட வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெறுவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்பு கல்லூரிகளில், தமிழ் வழியிலும் பொறியியல் பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த நிலையில் தூத்துக்குடி, நாகர்கோவில், ஆரணி உள்ளிட்ட 11 உறுப்பு கல்லூரிகளில், தமிழ் மொழியில் உள்ள மெக்கானிக்கல் மற்றும் சிவில் இளங்கலை பொறியியல் படிப்புகளை தற்காலிகமாக மூட அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது.

இதே போல், 6 கல்லூரிகளில் ஆங்கில வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப் பிரிவுகளும் மூடப்படும் எனவும்,

மாணவர் சேர்க்கை இல்லாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் எதுவும் நீக்கப்படாது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க... சைடிஷ்-க்காக நண்பனை கொலை செய்த இளைஞர்... மது போதையில் அரங்கேறிய கொடூரம்...!

இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ள அவர், உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி அறிவிப்பு திரும்ப பெறப்படுவதாகவும்,

top videos

    அடுத்த சிண்டிகேட் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு, பாடங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Anna University, Tamil language