முகப்பு /செய்தி /கல்வி / உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை புதுப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு : ஏஐசிடிஇ

உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை புதுப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு : ஏஐசிடிஇ

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம்

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம்

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (AICTE) கீழ் நாடு முழுவதும் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன

  • Last Updated :
  • Tamil Nadu |

உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை புதுப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஏப்ரல் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (AICTE) கீழ் நாடு முழுவதும் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகள் ஆண்டுதோறும், தங்களுக்கான அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

இதையும் வாசிக்க: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் RTE பொருந்துமா? அரசுப் பணியில் இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாமா? உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்!

அதன்படி, 2023-24 கல்வி ஆண்டுக்கான அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகள் மார்ச் 23 முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் , கல்லூரிகளின் கோரிக்கையை ஏற்று அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அபராதத்துடன் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Engineering