முகப்பு /செய்தி /கல்வி / கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர முதல் நாளிலேயே குவிந்த விண்ணப்பங்கள்..!

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர முதல் நாளிலேயே குவிந்த விண்ணப்பங்கள்..!

மாதிரி படம்

மாதிரி படம்

College of Arts and Science Admission 2023 | மே 19 ந் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்கள் விற்பனை  www.tngasa.in என்ற இணையதள முகவரியில் நேற்று காலை முதல் தொடங்கியது.

மாணவர் சேர்க்கைக்கு தமிழ் மொழி பட்டப்படிப்பு தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனியாக தரவரிசை பட்டியலும், ஆங்கில மொழி பட்டப்படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  நீட் தேர்வு... தமிழ்நாடு பாடத் திட்டத்தில் இருந்து 80%க்கும் அதிகமான கேள்விகள்... முழு விவரம்..!

 கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்வதற்கு முதல் நாளிலேயே  நேற்று  164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 ,07,395 இளநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு முதல் நாளிலேயே 18,322 பேர் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர். மேலும் வரும் மே 19 ந் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Education