முகப்பு /செய்தி /கல்வி / ஊட்டியில் 34 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு - காரணம் இதுதான்...

ஊட்டியில் 34 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு - காரணம் இதுதான்...

மாதிரி படம்

மாதிரி படம்

உதகை அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் 34 மாணவர்களுக்கு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

தமிழ்நாடு முழுவதும் மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை 12-ம் வகுப்புத் தேர்வு நடைபெற்றது. இதற்கிடையில் மார்ச் மாதம் 27-ம் தேதி உதகை அருகே உள்ள சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கணித தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பணியில் இருந்த ஆசிரியர்கள் உதவி செய்ததாக குற்றசாட்டு எழுந்தது.

இந்நிலையில் அப்பள்ளியில் அறை எண் 3 மற்றும் 4 -ல் கணிதத் தேர்வு எழுதிய 34 மாணவர்களுக்கு கணித தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு விடைத்தால் சென்னை தேர்வு துறைக்கு அனுப்பபட்டுள்ளதால் தேர்வு முடிவுகள் இன்று வெளிடவில்லை.

மாணவர்களுக்கு உதவிய விவகாரத்தில் அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய ராம்கி, மூர்த்தி, முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், வழித்தட அலுவலர் சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகியோரை மாவட்ட பள்ளி கல்வி துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

top videos

    செய்தியாளர்: ஐயப்பன், ஊட்டி.

    First published: