முகப்பு /செய்தி /கல்வி / 12th Exam Result : மே 8-ம் தேதி வெளியாகும் +2 தேர்வு முடிவுகள்..எப்படிப் பார்ப்பது?

12th Exam Result : மே 8-ம் தேதி வெளியாகும் +2 தேர்வு முடிவுகள்..எப்படிப் பார்ப்பது?

பொதுத்தேர்வு முடிவுகள்

பொதுத்தேர்வு முடிவுகள்

12th Exam Result : 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 8 ந் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான 2022-23 ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. இந்தத்தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51,303 மாணவர்கள் எழுதியுள்ளனர்.

இந்த நிலையில், அரசு தேர்வு துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8 ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in,

www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளத்தில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம்.

Also Read : 12th Public Exam Result | 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு..!

மாணவர்கள் தேர்வுக்காகப் பதிவு செய்த செல்போன் எண்ணுக்குத் தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படும். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இன்றி தெரிந்து கொள்ளலாம்.

top videos

    மேலும், மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலுடன் கூடிய தேர்வு முடிவுகளையும் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

    First published:

    Tags: 12th exam, 12th Exam results, Public exams