முகப்பு /செய்தி /கல்வி / 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள்... பொதுத் தேர்வில் தவறான கேள்விகள் கேட்கப்பட்டதால் அறிவிப்பு..!

10ம் வகுப்பு மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள்... பொதுத் தேர்வில் தவறான கேள்விகள் கேட்கப்பட்டதால் அறிவிப்பு..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

வினாத்தாளை ஆய்வு செய்ததில், பிழை நேர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில வினாத்தாளில் 4 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருந்ததாக புகார் எழுந்த நிலையில், மாணவர்களுக்கு 5 மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில், ஒரு மதிப்பெண் பிரிவில் 4, 5, 6 ஆகிய கேள்விகள் குழப்பமாக இருந்ததால், அக்கேள்விகளுக்கு மாணவர்களால் முறையாக பதிலளிக்க முடியவில்லை என புகார் எழுந்தது. இதேபோன்று, 28வது கேள்வியும் தவறாக கேட்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

இதனை அடுத்து, ஒரு மதிப்பெண் பிரிவில் 4, 5, 6 ஆகிய கேள்விகளுக்கும், இரு மதிப்பெண் பிரிவில் 28வது கேள்விக்கும் முழுமையாக மதிப்பெண் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையும் படிங்க; ஜப்பான்.. சிங்கப்பூர்.. முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்லும் முதல்வர் ஸ்டாலின்!

வினாத்தாளை ஆய்வு செய்ததில், பிழை நேர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு 3 மதிப்பெண்ணும், 28வது கேள்விக்கு இரண்டு மதிப்பெண்ணும் என, 5 மதிப்பெண்கள் வழங்க தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்த கேள்விகளுக்கு மாணவர்கள் எந்த விடையை எழுதியிருந்தாலும், 5 மதிப்பெண்கள் முழுமையாக வழங்க வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: 10th Exam, Public exams