பழனியை அடுத்துள்ள கோம்பைபட்டி கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் சிறுத்தை, காட்டுயானைகள், மான், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகிறது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள ராமபட்டினம்புதூர், சத்திரபட்டி கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் காட்டுயானைகள், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
மேலும் மரங்களை உடைத்து சேதப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோம்பைபட்டியில் பெருமாள்சாமி மற்றும் துரைசாமி அகியோரது தோட்டத்திற்குள் நுழைந்த மாமரங்கள், தென்னைமரங்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளது.
மேலும் தோட்டத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின் வேலிகளை உடைத்து சேதப்படுத்திவிட்டு யானை கூட்டம் தோட்டத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு தினங்களாக இரவு நேரத்தில் தோட்டத்தில் புகுந்து மரங்களை சேதப்படுத்துவதால் அந்த பகுதியில் வசிக்கும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
யானைகள் தோட்டத்தில் புகுந்து சேதப்படுத்துவது குறித்து ஒட்டன்சத்திரம் வனத்துறையினரிடம் விவசாயிகள் தகவல் தெரிவித்த போதும் அடர்ந்த வனபகுதிக்குள் யானைகளை விரட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் படிக்க... அபரா ஏகாதசி விரதம்... முக்கியத்துவமும் அதன் பலன்களும்..!
எந்த நேரமும் யானைகள் தோட்டத்திற்குள் நுழையலாம் என்ற அச்சத்தால் விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் உடனடியாக காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், தூர்ந்து போன அகழிகளை சரி செய்ய வேண்டும். யானைகள் சேதப்படுத்திய மரங்களுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: அங்குபாபு நடராஜன், பழனி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.