முகப்பு /செய்தி /திண்டுக்கல் / கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்... 5 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்!

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்... 5 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்!

கொடைக்கானல் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானல் போக்குவரத்து நெரிசல்

கோடை விடுமுறையைக் கொண்டாட அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

  • Last Updated :
  • Kodaikanal, India

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால், வெள்ளி நீர்வீழ்ச்சி நுழைவு வாயில் ப‌குதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் மலை பிரதேசங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அதன்படி தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கொடைக்கானலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளின் தொட‌ர் வ‌ருகையால் புலிச்சோலை,  வெள்ளிநீர்வீழ்ச்சி நுழைவுவாயில் ப‌குதி, செண்ப‌க‌னூர், உகார்த்தேந‌க‌ர், க‌ல்ல‌றை மேடு, ஏரிச்சாலை, மூஞ்சிக்க‌ல் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் சுமார் 5 கிலோ மீட்ட‌ர் தூர‌த்திற்கும் மேலாக‌ போக்குவ‌ர‌த்து நெரிச‌லும் அடிக்க‌டி ஏற்ப‌ட்டு வ‌ருகின்ற‌து,

இதையும் படிங்க: ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய கட்டுப்பாடு உள்ளதா... வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் மாற்றமுடியுமா? - சந்தேகங்களும் விளக்கமும்

 போக்குவ‌ர‌த்து நெரிச‌ல் ஏற்ப‌டுவ‌தால்  சுற்றுலாப்ப‌ய‌ணிகளின் வாக‌ன‌ங்க‌ள் சுமார்  ஒரு ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ ம‌லைச்சாலைக‌ளில் காத்திருந்து ஊர்ந்த‌ப‌டி சுற்றுலா த‌ல‌ங்க‌ளுக்கும், தாங்க‌ள் செல்ல‌வேண்டிய‌ இட‌ங்க‌ளுக்கும் ந‌க‌ர்ந்து வ‌ருகின்ற‌ன‌ர். போக்குவ‌ர‌த்து காவல்துறையினரை அதிகளவில் ப‌ணியில் அம‌ர்த்தி போக்குவ‌ர‌த்து நெரிச‌லை சீர் செய்ய‌ வேண்டும் என‌ சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

top videos

    செய்தியாள‌ர்- ஜாப‌ர் சாதிக்

    First published:

    Tags: Dindugal, Kodaikanal, Local News