திண்டுக்கல்லில் கோடை கால இலவச பயிற்சி முகாம் நாளை தொடங்குகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திண்டுக்கல் மாவட்ட ம் சார்பாக 2023-24ம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் கோடைக்கால இலவச பயிற்சி முகாம் மாணவ, மாணவிகளுக்கு தகுதி வாய்ந்த பயிற்றுநர்களால் நாளை (01.05.2023) முதல் 15.05.2023 வரை 15 நாட்கள் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையிலும். மாலையில் 4 மணி முதல் 6.30 வரையிலும் நடைபெற உள்ளது.
இந்த பயற்சி முகாம் 1.தடகளம், 2.கூடைப்பந்து, 3.கால்பந்து, 4.கையுந்துப்பந்து மற்றும் 5.ஹாக்கி (இருபாலருக்கும்) ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி நடைபெறவுள்ளன. பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்படும். கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ 01.05.2023 அன்று காலை 6மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் அவர்களை நேரிலோ அல்லது 7401703504 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dindigul, Local News