முகப்பு /திண்டுக்கல் /

திண்டுக்கல்லில் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி..! முதல் பரிசை தட்டிச் சென்றது யார் தெரியுமா?

திண்டுக்கல்லில் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி..! முதல் பரிசை தட்டிச் சென்றது யார் தெரியுமா?

X
திண்டுக்கல்லில்

திண்டுக்கல்லில் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி

Football Tournament in Dindigul | திண்டுக்கல்லில் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் புனித வியாகுல அன்னை விளையாட்டு மைதானத்தில் விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் மற்றும் காஸ்மாஸ் லயன் சங்கம் இணைந்து நடத்தும் 2 ஆம் ஆண்டு மாநில அளவிலான மேரி மாதா ஐவர் கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது.

இதில் ஆடவர்களுக்கான கால்பந்து போட்டி மற்றும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்து போட்டி என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் திண்டுக்கல், சென்னை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சேர்ந்த 40 அணிகள் பங்கு பெற்றன.இறுதிப்போட்டியில் மதுரை சேவியோ எப்சி அணியும் , திண்டுக்கல் சேது எப்சி அணியும் மோதியது.

திண்டுக்கல்லில் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி

இதில் 2.0 என்ற கோல்ட் கணக்கில் திண்டுக்கல் சேது எப் சி அணி வெற்றி பெற்றது. இரண்டாம் பரிசை மதுரை சேவியோ எஃப் சி அணியும் வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசை தொழிலதிபர் பிரகாஷ், முப்பதாயிரத்திற்கான காசோலையும் வெற்றி கோப்பையும் வழங்கினார்.

இப்பரிசளிப்பு விழாவில் துணை மேயர் ராஜப்பா, காஸ்மஸ் லயன்ஸ் சங்க புரவலர் திபூர்சியஸ், திருவருட்பேரவை பொருளாளர் காஜா மைதீன்,17 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்,மேரி மாதா கால்பந்து கழக நிறுவனர் ஹெப்சிபா ஆண்டனிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Dindigul, Local News