முகப்பு /திண்டுக்கல் /

திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகை..

திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகை..

X
ரமலானை

ரமலானை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்து வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.

Ramadan Prayer At Dindigul Begumpur : திண்டுக்கல் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

  • Last Updated :
  • Dindigul, India

இஸ்லாமியர்கள் கடந்த 30 நாட்களாக நோன்பு மேற்கொண்டு ரம்ஜான் பண்டிகை தினமான இன்று (ஏப்ரல் 22)இஸ்லாமியர்கள் காலையில் புத்தாடை அணிந்து பள்ளிவாசல்களுக்கு சென்று அங்கு நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.

அதன்படி திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. பள்ளிவாசல் தலைமை இமாம் அபுபக்கர் ரம்ஜான் சிறப்பு தொழுகையை நிகழ்த்தினார்.

இதில் பேகம்பூர் மட்டுமின்றி திண்டுக்கல் நகரை சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 2000 க்கும் மேற்பட்ட ஏராளமான இஸ்லாமியர்களும் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் தொழுகை முடிந்து ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இதேபோன்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான பங்கேற்றனர்.

top videos
    First published:

    Tags: Dindigul, Local News, Ramzan