முகப்பு /திண்டுக்கல் /

கரும்பு ஜூஸில் இத்தனை மூலிகைப் பொருட்களா..! திண்டுக்கல்லில் ஜோராக நடக்கும் மூலிகை கரும்பு ஜூஸ்..!

கரும்பு ஜூஸில் இத்தனை மூலிகைப் பொருட்களா..! திண்டுக்கல்லில் ஜோராக நடக்கும் மூலிகை கரும்பு ஜூஸ்..!

X
கரும்பு

கரும்பு ஜுஸ்

Herbal Sugarcane Juice | திண்டுக்கல் 80 அடி சாலையில் அரசு பெண்கள் கல்லூரி எதிரே பல்வேறு மூலிகை கலந்த கரும்பு ஜூஸை விற்பனை செய்து வருகிறார் கணேசன்.

  • Last Updated :
  • Dindigul, India

கோடைக்காலத்தில் அனைவரும் உடல் சூட்டை தணிக்க குளிர்ச்சியான பானம் அருந்துவதை விரும்புவது வழக்கம். இந்நிலையில், திண்டுக்கல்லில் கரும்புச்சாறுடன் எலுமிச்சை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, துளசி, வாழைத்தண்டு, கேரட், முடக்கத்தான் போன்ற மருத்துவ குணநிறைந்த புத்துணர்ச்சியை தரக்கூடிய கரும்பு ஜூஸ் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது.

மூலிகை கரும்பு ஜுஸ்

இந்த கரும்பு ஜூஸில் உடல் சூடு, வயிற்றுவலி, செரிமான பிரச்சனை, சர்க்கரை நோய், உடல் சோர்வு, நார்ச்சத்து குறைபாடு, உள்ளிட்ட பல்வேறு உடல் பிரச்சினைகளை சரிசெய்ய உதவும் என கூறப்படுகிறது. மேலும் கடைக்கு ஜூஸ் குடிக்க வரும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கும் உடல் நலத்திற்கும் ஏற்றவாறு பல்வேறு மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளும் தயார் செய்து தருவதாகவும், ஒவ்வொரு வகையான கரும்புச்சாறும் அதன் தரத்திற்கு ஏற்ப 20 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்வதாகவும் கரும்பு ஜூஸ் வியாபாரி தெரிவித்தார்.

top videos
    First published:

    Tags: Dindigul, Food, Health, Lifestyle, Local News, Sugarcane Juice