முகப்பு /திண்டுக்கல் /

இங்க ட்ரெக்கிங் செய்து தான் போக முடியும்.. திண்டுக்கல் சிறுமலையில் 500 ஆண்டுகள் பழமையான வெள்ளிமலை கோவில்!

இங்க ட்ரெக்கிங் செய்து தான் போக முடியும்.. திண்டுக்கல் சிறுமலையில் 500 ஆண்டுகள் பழமையான வெள்ளிமலை கோவில்!

X
திண்டுக்கல்

திண்டுக்கல் சிறுமலை

Dindugal Sirumalai | வெள்ளிமலை சிவன் கோவில் வலதுபுறத்தில் சிறு சிறு கற்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி  வைக்கப்பட்டிருக்கும், இதற்குக் காரணம் எத்தனை கற்கள் அடுக்கி வைக்கின்றோமோ அத்தனை மாடி வீடுகள் கட்டுவதற்கு வேண்டிக் கொள்வதாக ஐதீகம் உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் உள்ள சிறுமலை வெள்ளிமலை கோவிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்தக் வெள்ளிமலை கோவிலுக்கு செல்ல சிறுமலை அகஸ்தியர் புறத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் வரை மலைப்பாதையில் பயணம் செய்ய வேண்டும், இந்த அகஸ்தியர்புரத்தில் சிவசக்தி சித்தர் பீடம் என்ற ஆசிரமத்தில் கோவிலுக்கு செல்லும் முன்பும் சென்ற பின்பும் எப்படிப்பட்ட வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாசகங்கள் கோவிலுக்கு செல்லும் முன் பக்தர்கள் படித்துவிட்டு செல்ல வேண்டும் என்பதற்காக எழுதி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெள்ளி மலையை நோக்கி பயணம் செய்யும் பக்தர்கள் மலைப்பாதையின் அழகை ரசித்துக்கொண்டு குடும்பத்துடன் செல்பி எடுத்துக் கொண்டும் மூலிகை நறுமணத்தை சுவாசித்துக் கொண்டும், வெள்ளிமலை கோவிலில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்தை தரிசனம் செய்ய வருவார்கள்.

இதையும் படிங்க : 24 மணிநேர இலவச வைஃபை (Wi-Fi) வசதி.. புதுச்சேரியில் எங்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

இந்த வெள்ளிமலை சிவன் கோவில் வலதுபுறத்தில் சிறு சிறு கற்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும், இதற்குக் காரணம் எத்தனை கற்கள் அடுக்கி வைக்கின்றோமோ அத்தனை மாடி வீடுகள் கட்டுவதற்கு வேண்டிக் கொள்வதாக ஐதீகம் உள்ளது.

தீப கோபுரம்

இதனைத் தொடர்ந்து சிவன் கோயிலின் முன்புறம் விநாயகர் கோவிலில் முருகன் கோவிலும் சிறுமலையை நோக்கி பார்த்தவாறு அமைந்திருக்கிறது,இந்த தெய்வங்களை தரிசனம் செய்துவிட்டு சிவன் கோவிலை நோக்கி செல்லும் பக்தர்கள் கோவிலில் பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தும் வகையில் பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கமாக நடைபெறும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சிவன் கோயிலில் பின்புறம் தீப கோபுரம் ஒன்று அமைந்துள்ளது, இந்த கோபுரத்தில் சிவராத்திரி அன்று திருவண்ணாமலை தீபம் ஏற்றுவது போல மகா தீபம் ஏற்றி வழிபடுவதாக கூறப்படுகிறது.

உடுக்கை அடி வழிபாடு

top videos

    மேலும் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கும் போது 200 மீட்டர் இறங்கியவுடன் இடது புறம் ஒரு பாறை அருகே சிறிய சிவலிங்கம் சூலாயுதத்துடன் அமைந்துள்ளது, இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது இங்கு வரும் பெரும்பாலான பக்தர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை, அப்படியே தெரிந்திருந்தாலும் அங்கே சென்று அந்த சிவலிங்கத்தை தரிசனம் செய்வது மிகவும் ஆபத்தான தருணத்தை தரும். இருந்தாலும் ஒரு சிலர் அங்கு சென்று தொங்கும் பாறை மேல் அமைந்துள்ள சிவலிங்கத்தின் அருகில் அமர்ந்து 1008 மந்திரங்கள் கூறி உடுக்கை அடித்து வழிபடுவது சிறப்பான ஒன்றாகும்....

    First published:

    Tags: Dindigul, Local News