முகப்பு /திண்டுக்கல் /

திண்டுக்கல்லில் சுட்டெரிக்கும் வெயில்.. வீட்டைவிட்டு வெளியேவர மக்கள் அச்சம்!

திண்டுக்கல்லில் சுட்டெரிக்கும் வெயில்.. வீட்டைவிட்டு வெளியேவர மக்கள் அச்சம்!

X
சுட்டெரிக்கும்

சுட்டெரிக்கும் சூரியனால் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படும் பொதுமக்கள்

Dindugal News | திண்டுக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வீட்டை விட்டு வெளியேறவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

  • Last Updated :
  • Dindigul, India

கோடை காலம் என்றாலே மாணவர்களுக்கு விடுமுறை கொண்டாட்டம் வருவது போல் அனைவருக்கும் கொளுத்தும் வெயிலின் ஞாபகம் தான் வரும். இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்களின் கணித்துள்ளனர்.

கடந்த ஆண்டு பதிவான வெப்பநிலையை காட்டிலும், இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சுமார் 33 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதற்கு ஏற்றார்போல திண்டுக்கல்லில் எந்த வருடமும் இல்லாத வகையில் இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெப்பம் அதிகமாக இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கே யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளதால் நிழலில் நின்றாலும், வெயிலின் வெப்ப காற்று உடலுக்கு வெக்கையை தருகிறது என, வேதனை தெரிவித்து வருகின்றனர் திண்டுக்கலை சேர்ந்த பொதுமக்கள்.

top videos
    First published:

    Tags: Dindigul, Local News, Summer