முகப்பு /செய்தி /திண்டுக்கல் / கொடைக்கானலில் ஒரு மணி நேர மிதமான மழை..! மகிழ்ச்சியில் விவசாயிகள்..

கொடைக்கானலில் ஒரு மணி நேர மிதமான மழை..! மகிழ்ச்சியில் விவசாயிகள்..

மிதமாக பெய்யும் மழை..!

மிதமாக பெய்யும் மழை..!

கொடைக்கான‌ல் ம‌ற்றும் அத‌ன் சுற்றுவ‌ட்டார‌ப்ப‌குதிக‌ளில் ஒரு ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ மித‌மான‌ ம‌ழை பெய்துள்ளது.

  • Last Updated :
  • Kodaikanal, India

தமிழகத்தின் பல பகுதிகளிலும் இடி மின்னலுடன் நேற்று பரவலாக மழை பெய்தது. 

வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 23 முதல் வரும் 27ம் தேதிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் ம‌லைப்ப‌குதிக‌ளில் காலை முதல் மித‌மான‌ வெப்ப‌ம் நில‌விய‌து.

இந்நிலையில் மாலை வேளையில் மேக‌மூட்ட‌ங்கள் த‌ரையிற‌ங்கி, சுமார் ஒரு ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ அப்ச‌ர்வேட்ட‌ரி, ஏரிச்சாலை, கீழ்பூமி, மூஞ்சிக்க‌ல், ஆன‌ந்த‌கிரி, உகார்த்தேந‌க‌ர் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் மித‌மான‌ ம‌ழையாக‌வும் மேலும் ஒரு சில‌ இட‌ங்க‌ளில் சார‌ல் ம‌ழையாக‌வும்  பெய்த‌து,.

Read More : தமிழகத்தில் இடி மின்னலுடன் கொட்டிய மழை - மின்னல் தாக்கியதில் ப்ளஸ் 1 மாணவி பலி

இதனால் ம‌லைப்ப‌குதி முழுவ‌தும் குளுமையான‌ சூழ‌ல் நில‌வி வ‌ருகின்ற‌து, ம‌லைப்ப‌குதிக‌ளில் க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ தொடர்ந்து மழை பெய்து வருவதால்  விவ‌சாய‌ விளைநில‌ங்க‌ளில் தற்போது பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்களுக்கு இந்த‌ மழை மிகவும் உகந்தது என விவசாயிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ள‌ன‌ர்.

top videos

    செய்தியாள‌ர்- ஜாப‌ர்சாதிக்

    First published:

    Tags: Dindigul, Kodaikanal, Rain updates