முகப்பு /திண்டுக்கல் /

திண்டுக்கல்லில் இ-சேவை மையம் அமைக்க வாய்ப்பு.. தவற விட்டுராதீங்க மக்களே!

திண்டுக்கல்லில் இ-சேவை மையம் அமைக்க வாய்ப்பு.. தவற விட்டுராதீங்க மக்களே!

திண்டுக்கல் இ-சேவை மையம்

திண்டுக்கல் இ-சேவை மையம்

E-Service Center | திண்டுக்கல் மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த, தகுதியுள்ள இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மாவட்டத்தில்"இ-சேவை மையம்" திட்டத்தின் கீழ் ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனதிண்டுக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு மகளிர்நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர்கள் ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்தி மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகின்றது. மேலும், அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது.

இதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, "அனைவருக்கும் இ-சேவை மையம்” திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் நோக்கமானது, அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும், மாவட்டங்களில் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையினை

அதிகரித்து இ-சேவை மையங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தினை குறைத்து, மக்களுக்குசிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதாகும்.

எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் “இ-சேவை மையம்”திட்டத்தின் கீழ் ஊரக மற்றும் நகரப்பகுதிகளில் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும்.

இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் https://www.tnesevai.tn.gov.in//மற்றும் https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்த வேண்டும். விண்ணப்பங்களை 14.04.2023 அன்று நேரம்: 20.00 வரை மட்டுமே பதிவு செய்ய இயலும்.

கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.3000 மற்றும் நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ.6000 ஆகும்.

இவ்விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும் மேலும், விண்ணப்பதாரருக்குரிய பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல் (Password) ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த, தகுதியுள்ள இளைஞர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச. விசாகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Dindigul, E Service, E Sevai, Local News