திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில் கருங்காலி மாலைகள் வழங்கப்படுகின்றன. இங்கே, சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய வகை பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே, ராமலிங்கம்பட்டி என்ற கிராமத்தில் பாதாள செம்பு முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் கருவறை பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது. பாதாளத்தில் பூமிக்கு அடியில், செம்பு உலோகத்திலான முருகன் வீற்றிருப்பதால் பாதாள செம்புமுருகன் என்ற பெயர் உருவானது.
பாதாளத்தில் உள்ள கருவறைக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடுவதற்கு பக்தர்கள் 18 படிகளை ஏறி இறங்கிச் செல்கின்றனர்.கோவிலின் முன்புறம் கிழக்கு நோக்கியயடி காவல்தெய்வமான சங்கிலி கருப்புசாமி கம்பிரமாக வீற்றிருக்கிறார். 15 அடி உயரம் கொண்ட இந்த சிலை ஒரே கல்லில் செய்யப்பட்டது. இங்கே, கருங்காலிமாலைகளை, முருகனின் பாதத்தில் வைத்து பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதே போல் கருங்காலி வேல், சந்தன வேல் ஆகியவற்றை முருகனுக்கு சாத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர்.
கருங்காலி மாலை களை அணிவதன் மூலம், பஞ்ச பூதங்களின் துணை கிடைக்கும் என்றும் எதிர்மறை சக்திகள் விலகும் எனவும் குழந்தை பேறு, தொழிலில் முன்னேற்றம், வீடு, நிலம் சொத்துகள் கிட்டும் என்றும், கல்வி ஞானம் அதிகரிப்பதுடன் குல தெய்வத்தின் அருள் கிடைக்கும் என்பதும் ஐதீகம். இதுமட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சி ஏற்பட்டு, மன இறுக்கம் விலகி உள்ளுளார்வு மேம்பாடு அடைவதுடன், ரத்த அழுத்தம் சீராகும் என்றும் நம்பப்படுகிறது.
மேலும் மிக முக்கியமாக இதுவரை பாதாள செம்பு முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணாத சுமார் 400க்கும் மேற்பட்ட 600 ஆண்டுகள் வரை பழமை வாய்ந்த பொருட்களான முன்னோர்கள் போருக்கு பயன்படுத்திய வால், கேடயங்கள், 800 ஆண்டுகள் பழமையான மான் கொம்பு , ஹரியானாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கருங்காலிக் கட்டைகளால் செய்யப்பட்ட பெட்டி, 600 ஆண்டுகள் பழமையான சிறிய அளவிலான குபேரன் மற்றும் காளியம்மன் சிலை, யானை தந்தங்களால் செய்யப்பட்ட குறியீடுகள் பொறித்த சிறிய பொருட்கள், மருத்துவம் சம்பந்தப்பட்ட ஓலைச்சுவடிகள், முன்னோர்கள் பயன்படுத்திய மதுக் குடுவைகள், மருத்துவத்திற்காக பயன்படுத்திய குடுவைகள் மற்றும் திருநீறு தயாரிப்பதற்காக பயன்படுத்திய குடுவைகள், இந்த ஒவ்வொரு குடுவையிலும் ஒவ்வொரு குறியீடுகளை பொறுத்து பயன்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன.
இதையும் படிங்க | கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள் - திணறும் சாலைகள்!
அத்துடன், யானை தந்தத்தால் செய்யப்பட்ட மிகச் சிறிய அளவிலான குடுவையில் சக்தி வாய்ந்த மருந்துகளை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்டதாகவும், முன்னோர்கள் பயன்படுத்திய வெள்ளி ஆபரணங்கள், நாணயங்கள், கைக்கத்தி, விலைமதிப்பில்லாத சிறிய வடிவிலான பல்வேறு வகையான செம்பு சிலைகள் மற்றும் வெண்கல சிலைகள், முன்னோர்கள் காலத்தில் பதியப்பட்ட பத்திரங்கள், உள்ளிட்ட பழமையான பொருட்கள் பாதாள செம்புமுருகன் கோவில் ஆதீனம் அறையில் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இவை அனைத்தும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தருணம் வரும்பொழுது கண்காட்சிக்காக வைக்கப்படும் என இந்த கோவிலில் ஆதீனம் தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dindigul, Local News, Murugan temple