முகப்பு /திண்டுக்கல் /

திண்டுக்கல் மந்தை காளியம்மன் கோயில் திருவிழா கோலாகலம்! ஊர்வலம் வந்த அம்மன் கரகம்!

திண்டுக்கல் மந்தை காளியம்மன் கோயில் திருவிழா கோலாகலம்! ஊர்வலம் வந்த அம்மன் கரகம்!

X
100

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மந்தை அம்மன் காளியம்மன் கோவில் திருவிழா 

Dindigul festival | திண்டுக்கல் மந்தை அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மந்தை அம்மன் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கரகம் ஜோடித்து வழிபாடு செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் A. புதூரில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மந்தையம்மன் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வீற்றிருக்கும் மந்தையம்மன் சாமிக்கு மனக்குறையை தீர்க்கும் மந்தை அம்மன் என்ற பெயரும் உள்ளது.

இந்த மந்தை அம்மன் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கரகம் ஜோடித்து வழிபாடு செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

இந்தத் திருவிழாவில் கரகம் ஜோடிக்கும் நிகழ்விற்கு மந்தையம்மன் காளியம்மன் கோவிலிலிருந்து பூசாரி அழைப்பிற்காக இரண்டு கிலோமீட்டர் வரை ஆண்கள் பெண்கள் என பக்தர்கள் அனைவரும் நையாண்டி மேளத்துடன் நடனமாடிக் கொண்டு ஆரவாரமாக சென்று பூசாரியை அழைத்து வருகின்றனர்.

பிறகு A. புதூரில் உள்ள கிணத்து மேட்டில் வைத்து தென்னங்குருத்து , கனகாம்பரம், மல்லிகை பூ, உள்ளிட்ட பொருட்களை கரகத்தில் சுற்றி, நூல் பிடித்து கட்டி, பட்டுப் பாவாடை மற்றும் ஆபரணங்களால், அலங்காரம் செய்து , சிறப்பு பூஜை செய்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து கரகம் ஜோடித்த பிறகு கிணத்து மேட்டிலிருந்து கரகத்தை எடுத்து தலையில் வைத்து அருள் இறக்கி சாமி ஆடிக்கொண்டு , வானவேடிக்கை மற்றும் மேளதாளங்களுடன் கோவிலுக்கு , வருகின்றனர்.

பிறகு கோவிலில் வைத்து மந்தையம்மன் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாரதனை காட்டி வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றுச் சென்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Dindigul, Festival, Local News