முகப்பு /திண்டுக்கல் /

திண்டுக்கல் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..!

திண்டுக்கல் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..!

X
திண்டுக்கல்

திண்டுக்கல் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Dindigul Kamachi Amman Temple | திண்டுக்கல் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.

  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் நத்தம் ரோட்டில்உள்ள காமாட்சி நகரில் உள்ள காமாட்சி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முதல் நாள் யாகசாலை பூஜை, விநாயகர் பூஜை, வாஸ்துசாந்தி, மற்றும் பூர்ணா ஹுதி பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து 2ம் காலயாகசாலபூஜைகளில்வைத்துசிறப்புபூஜை செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம், திருமலைக்கேணி, அழகர்மலை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து தீர்த்த குடங்கள் கொண்டுவரப்பட்டது.

திண்டுக்கல் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பின்னர் இந்த தீர்த்த குடங்களை நையாண்டி வாத்தியம் முழங்க பக்தியுடன் நடனம் ஆடிக்கொண்டு ஊர்வலமாக சென்று கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.  தொடர்ந்து பக்தர்களுக்கு கலசத்தில் ஊற்றிய புனித தீர்த்தமும், பூஜை மலர்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான கலந்து கொண்டு அம்மனின்அருளை பெற்றுசென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Dindigul, Local News