முகப்பு /செய்தி /திண்டுக்கல் / சாலையில் விழுந்த ராட்சத மரம்... கொடைக்கானலில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்!

சாலையில் விழுந்த ராட்சத மரம்... கொடைக்கானலில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்!

கொடைக்கானல்

கொடைக்கானல்

Kodaikanal traffic | வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் சுமார் ஒரு மணி நேரமாக சாலையில் காத்திருந்தனர்.

  • Last Updated :
  • Kodaikanal, India

கொடைக்கான‌ல் வ‌த்த‌ல‌க்குண்டு பிர‌தான‌ ம‌லைச்சாலையில் ட‌ம்ட‌ம் பாறை அருகே சாலையின் குறுக்கே ராட்ச‌த‌ ம‌ர‌ம் முறிந்து விழுந்து ஒரு ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ போக்குவ‌ர‌த்து பாதிக்கப்பட்டது.

வ‌ட‌ த‌மிழ‌க‌ க‌ட‌லோர‌ப்ப‌குதிக‌ள் மீது  வ‌ளிம‌ண்ட‌ல‌ கீழ‌டுக்கு சுழ‌ற்சி நில‌வுவ‌தால் த‌மிழ்நாடு புதுச்சேரியில் இடி மின்ன‌லுட‌ன் கூடிய‌ மித‌மான‌ ம‌ழை பெய்ய‌க்கூடும் என‌ சென்னை வானிலை ஆய்வு மைய‌ம் அறிவித்திருந்த‌து.

இந்நிலையில் திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் காலை முத‌ல் மித‌மான‌ வெப்ப‌ம் நில‌விய‌ நிலையில் மாலை வேளையில் க‌ருமேக‌ங்க‌ள் சூழ்ந்து சுமார் ஒரு ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ ஒரு சில‌ இட‌ங்களில் மித‌மான‌ ம‌ழையாக‌வும் மேலும் ஒரு சில‌ இடங்களில் சார‌ல் ம‌ழையாக‌வும் பெய்த‌து.

இத‌னை தொட‌ர்ந்து கொடைக்கான‌ல் வ‌த்த‌ல‌க்குண்டு பிர‌தான‌ ம‌லைச்சாலையில் பெய்த‌ ம‌ழையினால் ட‌ம்ட‌ம் பாறை அருகே மண் அரிப்புட‌ன் ராட்ச‌த‌ ம‌ர‌ம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்த‌து. இதனால் சுமார் ஒரு ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ போக்குவ‌ர‌த்து பாதிப்பு ஏற்ப‌ட்ட‌து. வார‌ விடுமுறையை கொண்டாட‌ கொடைக்கான‌லுக்கு வ‌ந்த‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளும், மாலை வேளையில் த‌ரைப்ப‌குதிக‌ளில் உள்ள‌ ஊர்க‌ளுக்கு திரும்பிய‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளும் இந்த‌ பிர‌தான‌ சாலையை க‌ட‌க்க‌ முடியாம‌ல் பெரும் அவ‌திய‌டைந்த‌ன‌ர்.

இதையும் படிங்க | ஒவ்வொரு வீட்டிலும் குருவிக்கூடு..! சிட்டுக்குருவியை பாதுகாக்கும் கரிசல்பட்டி கிராம மக்கள்..!

top videos

    இத‌னால் சாலையின் இருபுற‌ங்க‌ளிலும் சுமார் 10 கிலோமீட்ட‌ர் தூர‌த்திற்கு வாக‌ன‌ங்க‌ள் அணிவ‌குத்து காத்திருந்த‌ன‌. த‌க‌வ‌ல் அறிந்து ச‌ம்ப‌வ‌ இட‌த்திற்கு விரைந்து வ‌ந்த‌ வ‌ன‌த்துறை ம‌ற்றும் நெடுஞ்சாலைதுறையின‌ர், ம‌ர‌ம் அறுக்கும் இய‌ந்திர‌ம் மூல‌ம் சாலையின் குறுக்கே விழுந்த‌ ராட்ச‌த‌ ம‌ர‌த்தினை அறுத்தும், ம‌ண்க‌ளை அள்ளியும் அப்புற‌ப்ப‌டுத்திய‌தை தொட‌ர்ந்து சுமார் ஒரு ம‌ணி நேர‌த்திற்கு பின்பு போக்குவ‌ர‌த்து இய‌ல்பு நிலைக்கு திரும்பிய‌து.

    First published:

    Tags: Kodaikanal, Local News, Traffic