முகப்பு /செய்தி /திண்டுக்கல் / கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்...

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்...

கொடைக்கானல் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானல் போக்குவரத்து நெரிசல்

kodaikanal tourism | சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் இருந்து இறங்கிசென்று, வெள்ளி நீர்வீழ்ச்சி முன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.

  • Last Updated :
  • Kodaikanal, India

ஞாயிறு விடுமுறை மற்றும் கோடை விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை சீசன் களைகட்டியுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறையோடு கோடை விடுமுறையும் தொடங்கி இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. ஏராளமான சுற்றுலா வாகனங்கள் கொடைக்கானல் நோக்கி படையெடுப்பதால் வெள்ளி நீர் வீழ்ச்சி பகுதியில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள், ஊர்ந்துசெல்கின்றன. போக்குவரத்து நெரிசல் ஒருபுறமிருக்க, சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் இருந்து இறங்கிசென்று, வெள்ளி நீர்வீழ்ச்சி முன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கனமழை - எங்கெல்லாம் தெரியுமா?

top videos

    கொடைக்கானல் நகர் பகுதிகளிலும் கடும் போக்குவ‌ர‌த்து நெரிச‌ல் காணப்படுகிறது. அதேநேரம் பிரையண்ட் பூங்கா, பைன் ம‌ர‌க்காடுக‌ள், குணா குகை, ப‌சுமை ப‌ள்ள‌த்தாக்கு, வ‌ட்ட‌க்கான‌ல் அருவி, பாம்பார் அருவி, நட்சத்திர ஏரி போன்ற இடங்களின் அழகை, சுற்றுலாப்பயணிகள் கண்டு மகிழ்கின்றனர்.

    First published:

    Tags: Dindugal, Kodaikanal