முகப்பு /செய்தி /திண்டுக்கல் / 15,000-க்கும் மேற்பட்ட பல வகையான ரோஜா செடிகள்... கொடைக்கானல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

15,000-க்கும் மேற்பட்ட பல வகையான ரோஜா செடிகள்... கொடைக்கானல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானல் ரோஜா பூங்கா

கொடைக்கானல் ரோஜா பூங்கா

Kodaikanal Rose Park | கொடைக்கானல் பூத்துக்குலுங்கும் ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Kodaikanal, India

ம‌லைக‌ளின் இள‌வ‌ர‌சியான‌ கொடைக்கானலில் உள்ள‌ அப்சர்வேட்டரி பகுதியில் ரோஜா பூங்கா அமைந்துள்ளது. இது  தென்னிந்தியாவிலேயே மிக பெரிய ரோஜா பூங்காவாக‌வும் உள்ளது. மேலும் இந்த ரோஜா பூங்காவில் 15,000 க்கும் மேற்பட்ட பல வகையான ரோஜா செடிகளும், 1,500 க்கும் மேற்பட்ட வண்ணங்களில் ரோஜா மலர்களும் உள்ளது. இந்த ரோஜா பூங்காவில் உயர்ரக ரோஸ் மலர்களான பைரைட், லவ் அன் பீஸ் ,பாரடைஸ், அனுஷ்யா, ஆட்டன் கோல்டு, ஜாஸ் பெஸ்டிவெல், பிரின்சஸ் கிரி, அடோரா , போன்ற ரோஜா வகைகள் உள்ளது.

இந்த அழகிய ரோஜா மலர்களை பார்க்கும் சுற்றுலாப் பயணிகளின் க‌ண்க‌ளுக்கு விருந்தளிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது . இதில் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளை போன்ற நிறங்களில் தற்போது பூத்துக்குலுங்குகின்றது. தற்போது கோடை சீசன் களை க‌ட்டி உள்ளதால் ரோஜா பூங்காவில் அமைதியான ரம்மியமான சூழ்நிலை நிலவி வருவதாலும்  சுற்றுலாப்பயணிகள் தங்களது நேரத்தினை செலவழிக்க ஏதுவாகவும் அமைந்துள்ளது.

மேலும் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஒரே இடத்தில் பல வகையான ரோஜா மலர்களை கண்டு ரசித்து வருவதுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் உற்சாகம் அடைந்து வருகின்ற‌ன‌ர். குறிப்பாக இங்கு அமைக்கப்பட்டுள்ள செயற்கையான நீரூற்றினை ர‌சித்தும் நீரூற்றின் த‌ண்ணீர் செல்லும் வ‌ழித்த‌ட‌த்தில் நடந்த படியே சுற்றுலாப்பயணிகள் தங்களது குழந்தைகளுடன் உற்சாகம் அடைந்து வருவ‌துட‌ன் செல்பி ம‌ற்றும் புகைப்ப‌ட‌ம் எடுத்து ம‌கிழ்ந்து வ‌ருவ‌தும் குறிப்பிட‌த்த‌க்க‌து.

top videos

    செய்தியாள‌ர்- ஜாப‌ர்சாதிக்

    First published:

    Tags: Kodaikanal, Local News