முகப்பு /செய்தி /திண்டுக்கல் / ம‌ழைக்குப்பின் ர‌ம்மிய‌மாக‌ காட்சிய‌ளித்த‌ கொடைக்கான‌ல்.. ரசித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!

ம‌ழைக்குப்பின் ர‌ம்மிய‌மாக‌ காட்சிய‌ளித்த‌ கொடைக்கான‌ல்.. ரசித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!

ரம்மியமாக காட்சியளித்த கொடைக்கானல்

ரம்மியமாக காட்சியளித்த கொடைக்கானல்

Kodaikanal : ம‌ழைக்குப்பின் ர‌ம்மிய‌மாக‌ காட்சிய‌ளித்த‌ கொடைக்கான‌ல் ம‌லைப்பகுதி. ந‌ட்ச‌த்திர‌ ஏரியில் ப‌ட‌ர்ந்திருந்த‌ ப‌னி சூரிய‌ ஒளி ப‌ட்ட‌தும் ஆவியாகி சென்ற‌ காட்சிக‌ளை க‌ண்டு சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் ம‌கிழ்ச்சி.

  • Last Updated :
  • Kodaikanal, India

த‌மிழ‌க‌த்தில் 3 நாட்க‌ளுக்கு ஒரு சில‌ இட‌ங்க‌ளில் மித‌மான‌ ம‌ழை பெய்ய‌ வாய்ப்புள்ள‌தாக‌ சென்னை வானிலை ஆய்வு மைய‌ம் அறிவித்திருந்த‌து. இந்நிலையில், நேற்று திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் ம‌லைப்ப‌குதிக‌ளில் ஒரு ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ க‌ன‌ ம‌ழை ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் கொட்டி தீர்த்த‌து. இத‌னைத்தொட‌ர்ந்து இன்று அதிகாலை வேலையில் கொடைக்கான‌ல் ம‌லைப்ப‌குதி முழுவ‌தும் ர‌ம்மிய‌மாக‌ காட்சிய‌ளித்த‌து.

இதையும் படிங்க : ஊட்டி மாரியம்மன் கோவில் 8ம் நாள் திருவிழா.. தேர் பவனியில் நடனமாடி அசத்திய பெண்கள்!

குறிப்பாக‌ ந‌ட்சத்திர‌ ஏரி முழுவ‌தும் ப‌னி ப‌ட‌ர்ந்து காண‌ப்ப‌ட்ட‌து, சூரிய‌ ஒளி ப‌ட்ட‌தும் ந‌ட்ச‌த்திர‌ ஏரியில் ப‌ட‌ர்ந்திருந்த‌ ப‌னியான‌து ஆவியாகி சென்ற‌ காட்சிக‌ள் காண்போரின் க‌ண்க‌ளை க‌வ‌ர்ந்து இழுக்கும் வ‌கையில் அமைந்திருந்த‌து.

மேலும் இந்த‌ அற்புத‌ காட்சியை அதிகாலையில் ந‌ட்ச‌த்திர‌ ஏரியை சுற்றி ந‌டைப்பயிற்சி சென்ற‌வ‌ர்க‌ளும், இந்த‌ப்ப‌குதிக்கு வ‌ந்திருந்த‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளும் ஆர்வ‌த்துட‌ன் க‌ண்டு ர‌சித்த‌துட‌ன், செல்பி ம‌ற்றும் புகைப்ப‌ட‌ம் எடுத்து ம‌கிழ்ந்து வ‌ருகின்ற‌ன‌ர்.

செய்தியாள‌ர் : ஜாப‌ர்சாதிக் - கொடைக்கான‌ல்

First published:

Tags: Dindigul, Kodaikanal, Local News