முகப்பு /செய்தி /திண்டுக்கல் / கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை கவரும் ஹோம் மேட் சாக்கலேட்டுகள்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை கவரும் ஹோம் மேட் சாக்கலேட்டுகள்

ஹோம் மேட் சாக்கலேட்டுகள்

ஹோம் மேட் சாக்கலேட்டுகள்

கொடைக்கானல் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் விதவிதமான சாக்லெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

  • Last Updated :
  • Kodaikanal, India

Kodaikanal Tourism: கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து விதவிதமான ஹோம் மேட் சாக்கலேட்டுகள் தயாராகி வருகின்றன.

பல வண்ணங்களில், விதவிதமான சைஸ்களில் நாவில் எச்சில் ஊற வைக்கும் வகையில் இங்கு காணப்படுவை எல்லாம் பிரபல நிறுவனங்கள் தயாரித்த சாக்லேட்கள் அல்ல. கோடை வெயிலிலிருந்து தப்பிக்க, மலைகளின் இளவரசியான கொடைக்கானலை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தயாரிக்கப்பட்டவை.

கத்தரி வெயிலிலிருந்து தப்பிக்க, மலைவாசஸ்தலமான கொடைக்கானலுக்கு வரும் மக்கள் குளுமையான‌ சீதோஷ்ண‌ நிலையை அனுப‌விப்பதோடு, ப‌சுமை போர்த்திய‌ ம‌லைமுக‌டுக‌ளையும், ம‌லைத் தொட‌ர்க‌ளில் த‌வ‌ழ்ந்து செல்லும் மேக‌க்கூட்ட‌ங்க‌ளையும் கண்டு ரசிக்கின்றனர்.

பயணத்தின் நினைவாக இங்கு தயாரிக்கப்படும் சாக்லேட்டுகளை சுற்றுலாப் பயணிகள் தங்கள் ஊர்களுக்கு வாங்கிச் செல்கின்றனர். அதற்காக பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை விதவிதமான சாக்லேட்களை தயாரித்து வருகின்றன.

பாதாம், பிஸ்தா, ஹனி, முந்திரி, பழவகை, வால்நட், ஹேவல் நட், திராட்சை, மில்க், பட்டர், நட்டீஸ், வெள்ளை டபுள் டக்கர், சுகர் ஃப்ரீ, வெண்ணிலா, ஆரஞ்சு, மேங்கோ, ஸ்ட்ராபெரி, ஆப்பிள் உள்ளிட்ட பல ப்ளேவர்களில் தயாராகும் சாக்லேட்கள் கிலோ 600 ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

top videos
    First published:

    Tags: Kodaikanal