முகப்பு /திண்டுக்கல் /

காசி பானை சிறப்புகள் தெரியுமா? இந்த பானையில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா?

காசி பானை சிறப்புகள் தெரியுமா? இந்த பானையில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா?

X
காசி

காசி பானை

Dindigul news: கல்யாண சீர் வரிசையில் முக்கிய பங்கு வகிக்கும் காசிப்பானை முன்னோர்கள் காலத்தில் எவ்வளவு முக்கியத்துவமாக இருந்து வந்தது என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

  • Last Updated :
  • Dindigul, India

காசி பானை என்பது முன்னோர்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் குடிக்கும் பானை என்று சொல்லலாம். ஏனென்றால் இந்த காசிப்பானை முழுவதும் செம்பினால் செய்யப்பட்டது .

செம்பினால் செய்யப்பட்ட பானையில் இருந்து தண்ணீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்கின்றனர். இப்படி உடலுக்கு நன்மையை தருவதனால் விசேஷ வீடுகளில் சீர் வரிசையில் முக்கிய பங்கு வகிக்கித்தன இந்த காசிப்பானைகள்.

இப்படி முன்னொரு காலத்தில் பல வீடுகளிலும், விசேஷங்களிலும் முக்கிய பங்காற்றிய காசிப்பானை தற்போதய நவீன காலத்தில் அதிக அளவில் காண முடியவில்லை. இதனால் தற்போது காசிப்பானை உற்பத்தி செய்யும் குடிசை தொழிலாளர்களின் மத்தியில் உற்பத்தி செய்யும் ஆர்வம் குறைந்து வருகிறது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த காசிப்பானை தொழிலாளர்கள் 30 ஆண்டுகளாக, செய்து வரும் தொழிலை விட மனமில்லாமல் இன்று வரை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இது குறித்து நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த காசிப்பணை தொழிலாளியிடம் கேட்ட போது, அவர் இந்த காசிப்பானையின் சிறப்பு , காசிப்பாணையின் தயாரிப்பு முறை , மற்றும் காசிப்பானை தொழிலின் முந்தைய நிலை தற்போதைய நிலை குறித்து விரிவாக விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், தங்களது தொழிலை மேம்படுத்த அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினால் எங்களது வாழ்வாதாரம் உயரும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Dindigul, Local News