முகப்பு /திண்டுக்கல் /

நிலக்கோட்டை பகவதியம்மன் கோயில் திருவிழாவில் குத்தாட்டம் போட்ட பெண்கள்..

நிலக்கோட்டை பகவதியம்மன் கோயில் திருவிழாவில் குத்தாட்டம் போட்ட பெண்கள்..

X
கோயில்

கோயில் திருவிழாவில் குத்தாட்டம் போட்ட பெண்கள்

Dindigul Temples Festival | திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த இந்திராநகரில் 80 ஆண்டு பழமை வாய்ந்த காளியம்மன், பகவதியம்மன் கோயில் வைகாசித்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமர்ச்சையாக கொண்டாடுவது வழக்கம்.  

  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த இந்திராநகரில் 80 ஆண்டு பழமை வாய்ந்த காளியம்மன், பகவதியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு, பால்குடம், தீச்சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவர்.

இந்நிலையில், இந்த ஆண்டும் அதேபோல் ஏராளமான இளம்பெண்கள் பாரம்பரிய முறைப்படி அம்மன் வரவேற்பு பாடல்பாடி வரவேற்று, முளைப்பாரியைச் சுற்றி கும்மியடித்து வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து நடந்த சிறப்பு அபிக்ஷேக ஆராதனைகளுக்கு பின் தாரைத்தப்பட்டை, மேளதாளம் முழங்க, கண்ணை கவரும் வானவேடிக்கையுடன் அம்மன் பூங்கரகத்தில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நிலக்கோட்டை பகவதியம்மன் கோயில் திருவிழா

அப்போது மேளதாளம் உருமிமேளத்திற்கும் அம்மன் பாடல்களுக்கும் ஏராளமான பெண்கள் சாமியடினர், அதில் சில பெண்கள் இசைக்கு ஏற்ப குத்தாட்டமும் போட்டனர். தொடர்ந்து நடந்த விழாவில் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா முடிவடைந்தது. இத்திருவிழாவிற்கு சென்னை, கோவா மற்றும் பாண்டிச்சேரி மதுரை, கோவை, நெல்லை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Dindigul, Local News