முகப்பு /திண்டுக்கல் /

வீட்டில் இலவச நூலகம் நடத்தி வரும் திண்டுக்கல் திருநங்கை குணவதி!

வீட்டில் இலவச நூலகம் நடத்தி வரும் திண்டுக்கல் திருநங்கை குணவதி!

X
திண்டுக்கல்

திண்டுக்கல் திருநங்கை

Dindugul Transgender Gunavathy : திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2013 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டு தற்போது, கலைஞர் காப்பீட்டு திட்டம் வார்டு மேலாளராக பணிபுரிந்து வருகிறார் திருநங்கை குணவதி.

  • Last Updated :
  • Dindigul, India

திருநங்கை என்றாலே ஏளனமாக நினைக்கும் மனிதர்கள் வாழும் இந்த உலகத்தில் திருநங்கைகளுக்கு முன் உதாரணமாக சொந்தக் காலில் உழைப்பது மட்டுமின்றி, பிறரும் பயன்படும் வகையில் தனது வீட்டில் நூலகம் அமைத்து இலவசமாக செயல்படுத்தி வருகிறார் திண்டுக்கல்லை சேர்ந்த திருநங்கை குணவதி.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2013 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டு தற்போது, கலைஞர் காப்பீட்டு திட்டம் வார்டு மேலாளராக பணிபுரிந்து வருகிறார் திருநங்கை குணவதி. இது மட்டுமின்றி திருநங்கை குணாவதி " என் பெண்மை விற்பனைக்கு அல்ல" என்ற தலைப்பில் ஒரு புத்தகமும் எழுதியுள்ளார்.

இவர் திண்டுக்கல் என்.ஜி.ஓ காலணிபகுதியில், தான் வசித்து வரும் வீட்டிலேயே சுமார் 3,200 புத்தகங்கள் அடங்கிய நூலகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நூலகத்திற்கு திண்டுக்கல் சுற்று வட்டாரத்தில் உள்ள மாணவர்கள் , மற்றும் எழுத்தாளராக ஆசைப்படும் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் தினசரி புத்தகம் படிக்க வருகிறார்கள். மேலும் இந்த நூலகத்திற்கு வரும் மாணவர்கள் புத்தக வாசிப்பாளர்கள் யாரிடமும் கட்டணம் வசூலிக்காமல் செயல்படுவது அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் திருநங்கைகளாலும் சாதிக்க முடியும் என்பதற்கு சாட்சியாக தனது நூலகத்தில் பல்வேறு துறைகளில் பேச்சாளராகவும் , சாதனைப் பெண், தன்னம்பிக்கையின் மறு உருவமாக செயல்பட்டு வருவதற்கு பாராட்டு விழா நடத்தி ஏராளமான மெடல்களும், கேடயங்களும் தனது நூலகத்தில் அடுக்கி வைத்திருப்பது , நூலகத்திற்கு வருபவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இவ்வாறு சிறப்பாக தனி ஒரு நபராக தனது வாழ்க்கையை நடத்தி வரும் குணவதி, தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்றி வருவதாகவும், இந்தப் பணியை நிரந்தரமாக்கி திருநங்கையான எனது வாழ்க்கையை மேம்படுத்துமாறு தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Dindigul, Local News, Transgender