முகப்பு /செய்தி /திண்டுக்கல் / நண்பனுடன் சேர்ந்து கள்ளக்காதலி சித்ரவதை.. ஆத்திரத்தில் இளைஞனை பீர் பாட்டிலில் குத்திக்கொன்ற காதலன்

நண்பனுடன் சேர்ந்து கள்ளக்காதலி சித்ரவதை.. ஆத்திரத்தில் இளைஞனை பீர் பாட்டிலில் குத்திக்கொன்ற காதலன்

வேடசந்தூர் கொலை

வேடசந்தூர் கொலை

கள்ளக்காதல் விவகாரத்தில் சித்தரவதை  செய்த சம்பவத்தில்  இளைஞர் பீர் பாட்டிலால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் உமாராணி (வயது 42). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்த நிலையில் கோயமுத்தூரில் 5 ஆண்டுகளுக்கு முன்  பணி  செய்து வந்துள்ளார். அப்போது கோவையை சேர்ந்த கணேசன் (வயது 30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணேசன் பெயிண்டராக வேலை செய்து வந்துள்ளார்.

கணேசன் - உமாராணி இருவரும் ஒன்றாக வீடு எடுத்து கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. உமா கோபித்துக்கொண்டு தனது சொந்த ஊரான தேவநாயக்கன்பட்டிக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து கணேசன் மதுரையில் இருந்து தேவநாயக்கன்பட்டிக்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்தப்பகுதியை சேர்ந்த காளிதாஸ் (வயது 27) என்பவரை அழைத்து கணேசனை வேடசந்தூரில் இருந்து பஸ் ஏற்றிவிடுமாறு கூறியுள்ளார். அந்த இளைஞனும் கணேசனை பஸ் ஏற்றி விட தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.

அப்போது போகும்வழியில் இருக்கும் டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு போகலாம் எனக் கூறியுள்ளார். பூதாம்பட்டியில் உள்ள டாஸ்மாக்கில் இருவரும் மதுஅருந்தியுள்ளனர். அப்போது போதை அதிகமான நிலையில் காளிதாஸ், கணேசனை சித்ரவதை செய்துள்ளார். எங்கள் ஊர் பெண்ணிடம் நீ என்ன பிரச்சனை செய்கிறாய் உன்னை கொன்று விடுவேன் என மது போதையில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் காளிதாஸ்.

காளிதாஸின் பேச்சால் கலக்கம் அடைந்த கணேசன் உடனே உமாராணிக்கு போன் செய்துள்ளார். என்னை அடித்துக் கொன்று விடுவார்கள் போல தெரிகிறது உடனே என்னை காப்பாற்று என கூற   தகராறை கேள்விப்பட்ட உமாராணி வாடகை காரில் பூத்தாம்பட்டி அரசு மதுபான கடை அருகே வந்துள்ளார். அப்போது மூவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

கணேசன் போனில் பேசிக்கொண்டு சிறிது தூரம் சென்று தொலைபேசியில் பேசிவிட்டு காரில் வந்து பார்த்த பொழுது  காரில் அமர்ந்து உமாரானியுடன் காளிதாஸ் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.  அப்போது கணேசனை அழைத்து காரில் வைத்து தனது கள்ளக்காதலி முன்பே சித்ரவதை செய்துள்ளார்.  அடி தாங்க முடியாத  கணேசன் கோபத்தின் உச்சநிலை அடைந்து  தான் வைத்திருந்த பீர் பாட்டிலால் காளிதாசின் கழுத்தில் குத்த சம்பவ இடத்திலேயே காளிதாஸ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து  உயிரிழந்து விடுகிறார்.

இந்த சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேடசந்தூர் காவல்துறையினர் காளிதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் ஒருவர் மது போதையில் இன்னொருவரை அடித்து சித்தரவதை  செய்த சம்பவத்தில்   பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. மேலும் உமாரானியையும் கணேசனையும் பிடித்து வேடசந்தூர் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

top videos

    செய்தியாளர் : சங்கர் (திண்டுக்கல்)

    First published:

    Tags: Crime News, Dindugal, Tamil News