கொடைக்கானலில் கோடை சீசன் களைகட்ட தொடங்கிய நிலையில் வார விடுமுறை நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்போது குளுகுளு சீசன் களைகட்ட தொடங்கி உள்ளது. பசுமை போர்த்திய மலைமுகடுகளையும் அதில் தவழும் மேகக்கூட்டங்களையும் கண்டு ரசிப்பதற்கும் தமிழகமட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இதனிடையே வார விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் குவிந்து வருகின்றனர், இதனால் புலிச்சோலை, வெள்ளிநீர்வீழ்ச்சி, உகார்த்தேநகர், கல்லறை மேடு, சீனிவாசபுரம், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றுலாப்பயணிகள் வாகனங்கள் மலைச்சாலையில் அணிவகுத்து காத்திருந்து ஊர்ந்தவாறு தங்களது பயணங்களை தொடர்கின்றனர்
மேலும், கூடுதல் போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டதின் காரணமாகவும் சுற்றுலா இடங்களுக்கு செல்லும் சாலை ஒருவழி சாலையாக மாற்றப்பட்டதின் காரணமாகவும் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்து காணப்பட்டது.
இதனை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் மோயர்சதுக்கம், தூண்பாறை, பைன்மரக்காடுகள், குணாகுகை, அப்பர்லேக்வியூ, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் இயற்கை அழகினை கண்டு ரசித்தனர்.
வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, பாம்பார் அருவிகளில் சீராக கொட்டி வருன் நீரின் முன்பாக நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தும், நட்சத்திர ஏரியில் படகுசவாரியில் உற்சாகமாக ஈடுபட்டும், பிரையன்ட் பூங்காவில் புதிதாக பூத்துள்ள ஆயிரக்கணக்கான மலர்களையும் கண்டு ரசித்தும் ஏரியினை சுற்றி சைக்கிள்சவாரி, குதிரைசவாரி, நடைப்பயிற்சி போன்றவற்றிலும் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டாயம் வாசிக்க: வெளுக்கப்போகுது கனமழை... 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அலெர்ட்!
சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக காலை நேரத்தில் மிதமான வெயில் நிலவினாலும் அதனை தொடர்ந்து பிற்பகல் முதல் மேகமூட்டத்துடன் கூடிய இதமான ரம்யமான சூழ்நிலை நிலவி வருவதாலும் இதனை சுற்றுலாப்பயணிகள் பெரிதும் ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்.
சுற்றுலாப்பயணிகள் தொடர் வருகை காரணமாக தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kodaikanal