முகப்பு /செய்தி /திண்டுக்கல் / பலத்த சத்தத்துடன் அடுத்தடுத்து நில அதிர்வு... பீதியில் உறைந்த திண்டுக்கல் மக்கள்..!

பலத்த சத்தத்துடன் அடுத்தடுத்து நில அதிர்வு... பீதியில் உறைந்த திண்டுக்கல் மக்கள்..!

திண்டுக்கல்

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் தொடர்ந்து பலத்த சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பலத்த ஒலியுடன் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில், அதற்கும் நில நடுக்கத்திற்கும் தொடர்பு இல்லை என ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. வேடசந்தூர் , கீரனூர் பகுதிகளில் மார்ச் 28ஆம் தேதி முதல் அதிர்வுடன் கூடிய சத்தம் 9 முறை உணரப்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கோரிக்கையின் பேரில், புவியியல் மற்றும் நிலநடுக்கவியல் துறையின் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அதிர்வு உணரப்பட்ட இடங்களை ஆய்வு செய்த குழுவினர், மக்கள் கருத்துகளையும் கேட்டறிந்தனர்.

Also Read : இப்படி ஒரு திறமையா..! திண்டுக்கல் மாணவிக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு..!

ஆய்வுக் குழு தனது ஆய்வினை நிறைவு செய்த பிறகு, மாவட்ட ஆட்சியர் விசாகனுடன் கலந்துரையாடியது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம், நிலநடுக்கம் நடைபெற மிகக் குறைந்த வாய்ப்புள்ள இரண்டாவது மண்டலத்தில் அமைந்துள்ளது என ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

top videos

    எனினும் கீரனூர் பகுதியில் மார்ச் 28 மற்றும் ஏப்ரல் 10 ஆகிய தேதிகளில் உணரப்பட்ட நில அதிர்வில் , கட்டுமானம் செய்யப்படாத மண் மற்றும் கான்கீரிட் கட்டிடங்களில் சிறிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது எனவும், வேறு பாதிப்புகள் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.

    First published:

    Tags: Dindigul, Earthquake