திண்டுக்கல் கடைவீதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் லயன்ஸ் கிளப் சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் , திண்டுக்கல் நகர் பகுதியில் இருந்தும் சுமார் 400 நபர்கள் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்த பரிசோதனையில் கண் அழுத்த குறைபாடு, கிட்டப் பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடு, போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு சோதனையின் அடிப்படையில் குறைந்த விலையில் கண்ணாடியும் செய்து தரப்பட்டது.
மேலும் கண் பரிசோதனை முடிவில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் உள்ளவர்களுக்கு இலவசமாகவே திண்டுக்கல்லில் உள்ள கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது.
இந்த வகையில் இன்று இலவச கண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்ட 103 நபர்களை இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் இதுபோல கண் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச பரிசோதனை மற்றும் இலவச அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் இந்த முகாமை ஏற்பாடு செய்த லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் திரு சாமி ( 98942 70821 ) அவர்களை தொடர்பு கொண்டு இது பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dindigul, Local News