முகப்பு /திண்டுக்கல் /

மாதம் ₹50,000 வருமானம்.. வண்ண மீன் விற்பனையில் கலக்கும் திண்டுக்கல் விவசாயி..!

மாதம் ₹50,000 வருமானம்.. வண்ண மீன் விற்பனையில் கலக்கும் திண்டுக்கல் விவசாயி..!

X
திண்டுக்கல்

திண்டுக்கல் : வண்ண மீன் வளர்ப்பு தொழில்

Color Fish Business | திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி மணிகண்டன், வண்ண மீன்களை இயற்கையான முறையில் வளர்த்து விற்பனை செய்து மாதத்திற்கு 50 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.

  • Last Updated :
  • Dindigul, India

வண்ண மீன் வளர்ப்பு தொழில் மூலம் நல்ல லாபம் ஈட்டி வருகிறார் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர். திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து கேரளா வரைக்கும் இவரிடமிருந்து வண்ண மீன்கள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் விருவீடு அருகே உள்ள தர்மராஜபுரத்தில் உள்ள விவசாயி மணிகண்டன் இயற்கை முறையில் வண்ண மீன்கள் வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.  விவசாயி மணிகண்டன், தனது தோட்டத்தில் 20 அடி அகலமும் 40 அடி நீளமும் கொண்ட சிமிண்ட் தொட்டியில் வண்ண மீன்களை இயற்கையான முறையில் வளர்த்து, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், அதிக அளவு கேரளா மாநிலத்திற்கும் அனுப்பி வருகிறார்.

வண்ண மீன்கள்

இந்த மீன்களை இயற்கை முறையை பின்பற்றி, கம்பு, கேழ்வரகு, சோளம், தினை மற்றும் வரகு உள்ளிட்ட பல்வேறு தானிய வகைகளை மாவாக அரைத்து மீன்களுக்கு உணவாக கொடுத்து, வளர்த்து வருகின்றனர்.

மேலும் ( தாய் மீன்கள்) அதாவது குட்டி போடும் தருவாயில் உள்ள மீன்களுக்கு குளம், குட்டை பகுதிகளில், பாசனத்தில் இயற்கையாக வளரும் ரத்தப் புழுக்களை உணவாக கொடுக்கின்றனர். இந்த ரத்த புழுக்களை சாப்பிட்டால் தாய்மீன்களுக்கு கறிக்கஞ்சி சாப்பிட்ட திருப்தியும், அதிக சத்தும் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.

இப்படி வளர்க்கப்படும் வண்ண மீன்களில், கோல்ட் ஃபிஷ், வாஸ்து மீன், பிளாக் மோர்ஸ், புளு கோல்டு, கொய் கார்ப், ஜிம் ஜிம் கொய், ஏஞ்சல், விடோடெட்ரா, பிளாட்டி, ரெட் ஸ்குவார்டு, ஜூப்ரா, க்ரீன் டைகர், மிக்கி மவுஸ் பிளாட்டி, சண்டை மீன், உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களும் இடம் பெற்றுள்ளன.

மேலும் படிக்க :  10 ரூபாய்க்கு சுவையான மீன்குழம்பு சாப்பாடு ரெடி.. புதுச்சேரியில் ஃபேமஸ் ஆகும் ஹோட்டல்..

இந்த மீன்கள் அனைத்தும் வாரம் ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை என தரம் பிரித்து , பிளாஸ்டிக் பைகளில் தண்ணீர் மற்றும் கேஸ் நிரப்பி பேக்கிங் செய்து , கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் மாதத்திற்கு 50 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வருவதாகவும், மேலும் கூடுதலாக முதலீடு செய்தால் இன்னும் கூடுதலாக வருமானம் பார்க்கலாம் எனவும் கூறுகிறார் திணடுக்கல் விவசாயி மணிகண்டன்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Dindigul, Fish, Local News, Money18