முகப்பு /செய்தி /திண்டுக்கல் / தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு வருமா வராதா என்று பீதியை கிளப்ப வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு வருமா வராதா என்று பீதியை கிளப்ப வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

  • Last Updated :
  • Dindigul, India

தமிழ்நாட்டு மக்களுக்கு 90 விழுக்காடு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால், தடுப்பூசி போட்டவர்களுக்கு பாதிப்பு வருமா வராதா என்று பீதியை கிளப்ப வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ119.6 கோடி செலவில்  500 படுக்கைகள் கொண்ட புதிய  கட்டிடத்தை  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 119 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்துவைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “அனைத்து அரசு மருத்துவ நிர்வாகங்களிலும் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவித்திருக்கிறோம். ஏற்கனவே கொரோனா பேரிடர் தொடங்கியதில் இருந்து இந்த கொரோனா விதிமுறைகள் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. இன்னமும் விலக்கு பெறவில்லை.

Also Read:  தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 2பேர் கொரோனாவால் உயிரிழப்பு

இந்தியா முழுவதுமே இந்த விதிமுறைகள் நடைமுறையில் இருக்கிறது. இடையில் ஒரு  7 மாத காலம் கொரோனா ஓய்ந்திருந்தது. கொரோனாவின் புதிய வகை உருமாற்றமான எக்ஸ் பிபி,  பி.ஏ.2 என்கின்ற வைரஸ்களின் உருமாற்றம் கூடுதலாக ஆகத் தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை ,கோவை, மதுரை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ரேண்டமாக 2 விழுக்காடு பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தது. 20 நாட்களுக்கு முன்பு 2, 3 நாட்களுக்கு ஒரு முறை தான் பாதிப்பு இருந்து வந்தது. இப்போது துபாய்,  சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 10,  15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.

ஒமிக்ரானின் உருமாற்றமான வைரஸ் பாதிப்பு தமிழ்நாட்டில் மட்டுமல்ல,  இந்தியாவில் மட்டுமல்ல  உலகம் முழுவதும் இருக்கிறது. ஆனாலும் ஒரு அச்சமற்ற சூழல் இருக்கிறது. 2021 மே மாதத்தில்  முதல்வர் பொறுப்பேற்ற போது புதிய வைரஸ்கள் ஆல்பா,  பீட்டா,  டெல்டா,  டெல்டா பிளஸ் என்று ஏராளமான பாதிப்புகள் இருந்தன. ஆனால் இன்றைக்கு வந்திருக்கின்ற ஒமிக்ரான் உருமாற்றமாகியிருக்கிற வைரஸ் பெரிய அளவில் ஒரு அதிதீவிரமான சிகிச்சைக்கு போக வேண்டிய அவசியமோ,  அல்லது ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும் என்கிற நிலை இல்லை. இந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மருத்துவர்கள் ஆலோசனை பெற்று மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். 5,  நாட்கள் இருந்தால் அவர்கள் குணமாகிவிடுவார்கள். பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் அலட்சியமாக இருக்கக்கூடாது.  இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் நம்மை காட்டிலும் கூடுதலாக இருந்தாலும் எங்கேயும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நமது மாநிலத்தில் எல்லா மருத்துவமனைகளுக்கு வருபவர்கள் உள்நோயாளியாக இருந்தாலும், வெளிநோயாளியாக இருந்தாலும்,  பார்வையாளராக இருந்தாலும்,  மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த தொழிலில் இருப்பவர்கள் முழுநேரமும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் உள்ளவர்களில் 90 விழுக்காட்டினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அதனால் தான் கடந்த 7,  மாதங்களாக இறப்பு இல்லாத நிலை நீடிக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு 90 விழுக்காடு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால், தடுப்பூசி போட்டவர்களுக்கு பாதிப்பு வருமா வராதா என்று பீதியை கிளப்ப வேண்டாம் ”என்று கேட்டுக்கொண்டார்.

top videos

    செய்தியாளர்: சங்கர்  (திண்டுக்கல்)

    First published:

    Tags: Corona positive, CoronaVirus, Covid-19, Tamil Nadu, Tamil News