முகப்பு /திண்டுக்கல் /

பல நாட்டவரும் விரும்பும் நிலக்கோட்டை பூக்கள் பற்றி தெரியுமா? 

பல நாட்டவரும் விரும்பும் நிலக்கோட்டை பூக்கள் பற்றி தெரியுமா? 

X
நிலக்கோட்டை

நிலக்கோட்டை பூக்கள்

Nilakkottai Flowers : பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலக்கோட்டை பூக்கள் மற்றும் மலர் மாலைகள் பற்றிய செய்தி தொகுப்பு.

  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பல்வேறு கிராமவாசிகள் வாழ்வாதாரம் விவசாயத்தையும், விளை நிலங்களையும் சார்ந்தே உள்ளன . இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது நிலக்கோட்டை பூ மார்க்கெட் .

மல்லிகை பூவிற்கு மதுரை மல்லி என்று பெயர் வந்ததே நிலக்கோட்டையில் அதிக அளவில் விளைவிக்கப்படும் மல்லிகை பூ தான் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் திண்டுக்கல் மதுரை மாவட்டத்திலிருந்து தனி மாவட்டமாக பிரிப்பதற்கு முன்பு நிலக்கோட்டையும் மதுரை மாவட்டத்தில் உள்ளடங்கியது என்பதனால் மதுரை மல்லி என பெயர் பெற்றதாக கூறுகின்றனர்.

நிலக்கோட்டை பூக்கள்

இந்த நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பூக்களை தினசரி பறித்து வியாபாரத்திற்காக கொண்டு வருவார்கள். இதனால் அதிகாலை 6 மணி முதல் 10 மணி வரை நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் விவசாயிகளின் கூட்டம் அலை மோதிக் கொண்டே இருக்கும்.

இவ்வாறு விவசாயிகள் விளைவிக்கும் பூ வகைகளில் மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, கனகாம்பரம், செவ்வந்தி, செண்டுப் பூ, சேவல் கொண்டை பூ, பன்னீர் ரோஜாப்பூ, ஊட்டி ரோஸ், வாடாமல்லி, உள்ளிட்ட ஏராளமான பூ வகைகள் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இடம் பெற்றுள்ளன.

இவ்வாறு நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு வந்து சேரும் பூக்கள் அனைத்தும் சில்லறையாகவும் மொத்தமாகவும், சென்னை, ராமநாதபுரம், கோயம்புத்தூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், முக்கியமாக மலேசியா , கத்தார், துபாய், உள்ளிட்ட பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் விரும்பி வாங்குவதால், நிலக்கோட்டை மலர்மாலைகள் உலகம் எங்கும் பிரபலமாகி வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இவ்வாறு ஏற்றுமதி செய்யப்படும் பூக்களை கல்யாண மாலை, பூச்செண்டு, மலர் வலையம், பூக்கொத்து, உள்ளிட்ட பல்வேறு விதவிதமாக கோர்த்துக்கட்டியும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    First published:

    Tags: Dindigul, Local News